Veera Dheera Sooran BO: ரம்ஜான் பண்டிகைக்கு வசூல் வேட்டை ஆடியதா வீர தீர சூரன்.. 5 நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: சியான் விக்ரம் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் பெரிய லாபத்தை தராமல் இருந்து வந்த நிலையில், வீர தீர சூரன் படத்துக்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக ஓரளவுக்கு வசூலை வாரிக் குவித்து வருகிறது. கடந்த மார்ச் 27ம் தேதி மாலையில் தான் வீர தீர சூரன் திரைப்படம் வெளியானது. கடைசி நேரத்தில் ஓடிடி உரிமையை பெற்ற B4U நிறுவனம் தொடர்ந்த வழக்கு காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படமும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. அருண் குமார் இயக்கத்தில் சியான் விக்ரம், துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வீர தீர சூரன் படத்தை சியான் விக்ரம் ரசிகர்கள் கொண்டாடினாலும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வரவேற்பு இல்லை.

Veera Dheera Sooran slightly dropped at Day 5 Box Office and not bring big on Ramzan Day

ரம்ஜான் பண்டிகை தினமான நேற்றும் விடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமையை விட வீர தீர சூரன் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் சற்றே குறைந்துள்ளதாக கூறுகின்றனர். மத கஜ ராஜா படம் அள்ளியது போல 50 கோடி வசூலை வீர தீர சூரன் அள்ளுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விக்ரமுக்கு கிடைத்த வெற்றி: சியான் விக்ரம் நடிக்கும் படங்களுக்கு விமர்சன ரீதியாக வெற்றி கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், வீர தீர சூரன் படத்தை பார்த்தவர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். வீர தீர சூரன் பார்ட் 2வை முதலில் இறக்கியது. சிங்கிள் ஷாட்டில் சில சீன்களை வைத்து படமாக்கியது என அருண் குமார் எடுத்த எக்ஸ்பீரிமெண்ட் எல்லாம் சியான் விக்ரமுக்கு செமையா வொர்க்கவுட் ஆகியுள்ளது. வீர தீர சூரன் படத்தின் முதல் பாகம் மற்றும் 3ம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

வீர தீர சூரன் 5 நாள் வசூல்: விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் முதல் நாளில் 3.2 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளியது. வெள்ளிக்கிழமை 3.7 கோடி ரூபாயும், சனிக்கிழமை 5.5 கோடியும் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக 6.75 கோடி வரை வசூல் அதிகரித்து வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையான நேற்று திங்கட்கிழமை என்பதால் சற்றே வசூல் குறைந்து வெறும் 4.35 கோடி என்கிற அளவுக்குத்தான் வசூல் வந்திருப்பதாக sacknilk உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் தளங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

50 கோடி வசூல் வருமா?: இதுவரை ஒட்டுமொத்தமாக சியான் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் 23.50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி தான் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் வெளியாகிறது. 2 வாரங்கள் இதே வேகத்தில் வீர தீர சூரன் திரைப்படம் ஓடினால் 50 கோடிக்கும் அதிகமான வசூல் வரும் என்கின்றனர். ஆனால், வார நாட்களில் வசூல் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X