Kisi ka Bhai Kisi Ki Jaan Trailer - வீரம் ஹிந்தி ரீமேக் கிசி கா பாய் கிசி கி ஜான் ட்ரெய்லர்

மும்பை: Kisi ka Bhai Kisi Ki Jaan Trailer (கிசி கா பாய் கிசி கி ஜான் ட்ரெய்லர்) வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. ட்ரெய்லருக்கு கோலிவுட் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர்.

அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றினர். இதில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வீரம் படம் மெகா ஹிட்டானது. நீண்ட வருடங்கள் கழித்து அஜித் ஒரு கிராமத்து பின்னணியில் செய்த படம் என்பதால் அந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.

Veeram Hindi Remake Kisi ka Bhai Kisi Ki Jaan Trailer is out now

வீரம் ஹிந்தி ரீமேக்: கோலிவுட்டில் ஹிட்டான வீரம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கிறது வீரம் திரைப்படம். அப்படத்துகு கிசி கா பாய் கிசி கி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. சல்மான் கான் படத்தை தயாரித்திருக்கிறார்.

சல்மான் கானின் புதிய அவதாரம்: ஹிந்தியில் ரீமேக்காகியிருக்கும் வீரம் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். படத்தின் பின்னணி இசையை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரும், பாடல்களுக்கு ஹிமேஷ் ரேஷ்மயா, தேவிஸ்ரீ பிரசாத், ரவி பஸ்ரூ, சுக்பீர் சிங், பாயல் தேவ், அமல் மாலிக் என 6 இசையமைப்பாளர்களும் இசையமைத்திருக்கின்றனர்.

வெளியான பாடல்கள்: கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் நையோ லக்டா என்ற பாடல் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதி புட்டகம்மா என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

வெளியானது ட்ரெய்லர்: இந்நிலையில் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மசாலாவான வீரம் படம்; ஹிந்தியில் கொஞ்சம் தூக்கலான மசாலாவோடு தயாராகியிருப்பது ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

Veeram Hindi Remake Kisi ka Bhai Kisi Ki Jaan Trailer is out now

படத்தின் ட்ரெய்லருக்கு தமிழ் ரசிகர்கள் நெகட்டிவ் கமெண்ட்டையே கொடுத்துவருகின்றனர். மேலும், இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது வீரம் ஹிந்தி ரீமேக் போல் இல்லை எனவும் கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி, கைதியை ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில் அஜய் தேவ்கன் கெடுத்து வைத்திருந்தார். அதேபோல் வீரம் படத்தையும் சல்மான் கான் கெடுத்துவிடக்கூடாது எனவும் ரசிகர்களில் ஒருதரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராம்சரணின் நடனம்: இதற்கிடையே, படத்தில் இடம்பெற்றிருக்கும் என்ட்டம்மா என்ற பாடலுக்கு சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் பூஜா ஹெக்டேவுடன் தெலுங்கின் முன்னணி நடிகரான ராம்சரணும் நடனமாடியிருக்கும் வீடியோ வெளியானது. அந்தப் பாடலில் மூவரும் சேர்ந்து வேட்டி, சட்டையில் நாட்டு நாட்டு பாடலுக்கான நடனத்தை ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X