வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்.. வெளியானது சூப்பர் அப்டேட்
மும்பை: வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தின் சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தும், சிறுத்தை சிவாவும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்கள் பணியாற்றியுள்ளனர். இதில் விவேகம் தவிர மற்ற மூன்று படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வீரம் அஜித், சிவா
அஜித் மங்காத்தா படத்திற்கு படம் செய்த ஆரம்பம், பில்லா 2 ஆகிய படங்கள் சிட்டியில் நடப்பது போலவும், துப்பாக்கிச் சண்டைகள் அதிகம் இருக்கும்படியும் அமைந்திருந்தன. இது ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது. அஜித் உடனடியாக ட்ராக்கை மாற்ற வேண்டும் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

பல வருடங்களுக்கு பிறகு ரூட்டை மாற்றிய அஜித்
இதனை உணர்ந்துகொண்ட அஜித் கிராமத்து கதையில் நடிக்க முடிவு செய்தார். அந்த சமயத்தில் சிறுத்தை சிவா சொன்ன கிராமத்து ப்ளஸ் குடும்ப செண்ட்டிமெண்ட் உள்ள கதை பிடித்துப்போக உடனடியாக வீரம் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்.
அதுவரை கோட் சூட், பேண்ட் ஷர்ட்டில் மட்டும் திரையில் தோன்றிய அஜித்; வீரம் படத்துக்காக பல வருடங்களுக்கு பிறகு வேட்டி சட்டையில் களமிறங்கினார். அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க; விதார்த், பாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

கோலிவுட்டில் ப்ளாக்பஸ்டரான வீரம்
படம் செண்ட்டிமெண்ட்டாகவும், குடும்பங்களை கவரும் விதமாகவும் இருந்ததால் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அதனையடுத்து தொடர்ந்து சிவாவுடன் மூன்று படங்கள் அஜித் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம்
கோலிவுட்டில் ஹிட்டான வீரம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 'கட்டமராயுடு' என்ற பெயரிலும், கன்னடத்தில் தர்ஷன் நடிப்பில் 'ஒடியா' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டிருந்தது. தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிவருகிறது வீரம்

வீரம் ரீமேக்கில் நடிக்கும் சல்மான் கான்
ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கிறார். பூஜா ஹெக்டே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்துக்கு கிசி கா பாய் கிசி கி ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பின்னணி இசையை கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைக்க பாடல்களுக்கு ஹிமேஷ் ரேஷ்மயா, தேவிஸ்ரீ பிரசாத், ரவி பஸ்ரூ, சுக்பீர் சிங், பாயல் தேவ், அமல் மாலிக் என 6 இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

நாளை வெளியாகும் முதல் பாடல்
இந்நிலையில் கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் இடம்பெற்றிருக்கும் நையோ லக்டா என்ற பாடல் நாளை வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை பாடலின் டீசரோடு படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











