கமல் பிறந்தநாளில் வெளியான அஜீத்தின் வீரம் டீஸர்
தல அஜீத்தின் வீரம் டீஸர் கமல் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
ஆரம்பம் படத்திற்கு பிறகு அஜீத், நடித்து வரும் படம் வீரம். தமன்னா ஹீரோயின்.
கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். விஜயா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுவிப்பாக நடைபெற்று வருகிறது.

வீரம் ஃபர்ஸ்ட் லுக்
அஜீத் நடிக்கும் 54 வது படமான வீரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. பட்டு வேட்டி, பட்டு சட்டை பளபளக்க அஜீத் ஸ்டைலாக சிரித்தபடி கையில் டீ டம்ளருடன் அமர்ந்திருக்கும் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

வெளியான டீஸர்
கமல் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி வீரம் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

கத்தியும்... ரவுடிகளும்
கையில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கொலைவெறியோடு ஓடிவருகிறார்கள். அவர்களைக் கண்டு அஞ்சாமல் ஸ்லோமோசனில் திரும்பிப் பார்க்கிறார் அஜீத். கண்ணத்தில் வெட்டுக்காயம் இருக்கிறது. 25 செகண்டுகள் மட்டுமே

கமர்ஷியல் அடிதடி
அட்டகாசம் படத்திற்குப் பின்னர் அஜீத், வேஷ்டி-சட்டை அணிந்து நடிக்கிறார். சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது வீரம்.

அஜீத் - தமன்னா
அஜீத் - தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் விதார்த், மனோசித்ரா, சந்தானம், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சென்னை, கோவையில் நேற்று வெளியான டீஸர் மதுரை, உள்ளிட்ட பல நகரங்களில் இன்றைக்கு டீஸர் வெளியாகிறது.

தல பொங்கல்
தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம் படம் வெளியானது. 2014ம் ஆண்டு ஜனவரியில் அதாவது பொங்கல் தினத்தன்று ரசிகர்களுக்கு அடிதடி பொங்கல் படைக்க இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











