வீரம் டீஸர் 'மாஸ்', அஜீத் 'ராக்கிங்': இளம் ஹீரோக்கள் கருத்து
சென்னை: வீரம் டீஸர் சூப்பராக இருப்பதாக இளம் ஹீரோக்கள், சினிமா விமர்சகர்கள் மற்றும் அஜீத் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், தமன்னா நடித்து வரும் வீரம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த தீபாவளி மட்டும் 'தல' தீபாவளி அன்று. பொங்கலும் 'தல' பொங்கல் தான்.
இந்நிலையில் வீரம் படத்தின் டீஸர் கமல் ஹாஸனின் பிறந்தநாளான நேற்று ரிலீஸ் ஆனது. டீஸரைப் பார்த்துவிட்டு இளம் ஹீரோக்கள் ட்விட்டரில் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதை பார்ப்போம்.

ஜீவா
வீரம்! பவர் பேக்ட் டீஸர்! சீயர்ஸ் என்று நடிகர் ஜீவா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்
வீரம் டீஸர் பக்கா மாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் 👍👏 என்று வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

விக்ரம் பிரபு
அஜீத் சாரின் டீஸர் அருமையாக உள்ளது என்று கும்கி நாயகன் விக்ரம் பிரபு தெரிவித்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ்குமார்
வீரம் டீஸர் மாஸ். அஜீத் சார் வழக்கம் போல கலக்கலாக உள்ளார் என்று பென்சில் நாயகன் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











