வீரம்… தகராறு… கல்லா கட்டும் சன்டிவி
சன் டிவி வீரம், தகராறு, ஜீ டிவியில் கோலிசோடா என இந்த வாரம் ஞாயிறன்று புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
விஜய் டிவியில் விஜய் விருதுவிழாவின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது. நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி அனேக ரசிகர்களைக் கவரும் என்பதால் பிற சேனல்கள் தங்கள் பக்கமும் ரசிகர்களின் கவனத்தைத் திருப்ப போட்டி போட்டு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளன.

அஜீத்தின் வீரம்
சன் டிவியில் மதியம் 2 மணிக்கு அஜீத், தமன்னா நடித்த வீரம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

தகராறு
மாலையில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக அருள்நிதி, பூர்ணா நடித்த தகராறு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கோலி சோடா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 4 மணிக்கு புத்தம் புதிய சூப்பர் ஹிட் திரைப்படம் கோலிசோடா ஒளிபரப்பாக உள்ளது.

சர்வம்
கலைஞர் டிவியில் ஆர்யா, த்ரிஷா நடித்த ஷர்வம் திரைப்படம் ஞாயிறு மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

தீயா வேலை செய்யணும் குமாரு
விஜய் டிவியில் காலை 10 மணிக்கு தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த திரைப்படத்திற்குப் பின்னர் மதியம் 2 மணியில் இருந்து விஜய் விருது விழா கொண்டாட்டம் ஒளிபரப்பு தொடங்கிவிடும்.
ரசிகர்களின் கையில் உள்ள ரிமோட்டுக்கு நல்ல வேலை வைத்துள்ளன சேட்டிலைட் சேனல்கள்.


Click it and Unblock the Notifications











