விஷாலின் வீரமே வாகை சூடும் … ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!
சென்னை : விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதியும், வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்திலும் சில காட்சிகள் சென்னையிலும் படமாக்கப்பட்டன.

வீரமே வாகை சூடும்
தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஷாலின் பிறந்த நாள் அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

டிம்பிள் ஹையாதி ஜோடி
இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி நடிக்கிறார். வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். மேலும், யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
வீரமே வாகை சூடும் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் ஜனவரி 26ந தேதி அதாவது குடியரசுத் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

எனிமி
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை வினோத் என்பவர் தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
Recommended Video

விஷால் 32
விஷால் தற்போது 32 என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக சுனைனா நடித்து வருகிறார்.சமர் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 9 வருடங்களுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications