கெத்துகாட்டிய ‘வீரமே வாகை சூடும்‘ டீசர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள் !

சென்னை : நடிகர் விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்தில் பல பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த சாதனையை விஷாலின் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீரமே வாகை சூடும்

வீரமே வாகை சூடும்

எனிமி திரைப்படத்தை அடுத்து விஷால் நடித்து தயாரித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில், விஷாலின் மாறுப்பட்ட நடிப்பில், அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியானது.

இணையத்தில் சாதனை

இணையத்தில் சாதனை

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில், நடிகர் விஷால் நடித்துள்ள "வீரமே வாகை சூடும் " படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி 24 மணி நேரத்திலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

கமர்ஷியல் படம்

கமர்ஷியல் படம்

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படம் உருவாகி உள்ளது. இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் நடிகர் விஷால் இப்படத்தினை தயாரிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படம் ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X