வீரமே வாகை சூடு படு நஷ்டம் … தாக்கு பிடிப்பாரா விஷால்… அதிர்ச்சியில் படக்குழு!
சென்னை : விஷால் நடித்து வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.
இந்தப் படத்தின் நாயகியாக டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்.

விஷால்
முன்னணி நடிகரான விஷால் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இதில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆர்யாவுடன் இவர் இணைந்து நடித்த எனிமி திரைப்படம் எனிமி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எனிமி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதனால், ஒரு வெற்றித்திரைப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஷால் இருக்கிறார்.

வீரமே வாகை சூடும்
இதையடுத்து, அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவான வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தி இருந்தார் விஷால். இப்படத்தில் நாயகனாக நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்து வந்தார் விஷால். இதன் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கிய படக்குழு. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்தது.

எதிர்பார்க்கப்பட்ட கதை
இதையடுத்து, வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி 4ந் தேதி திரையரங்கில் வெளியானது. இதில், காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் விஷால், ஆனால் சமுதாயத்தில் நடக்கும் குற்றங்களால் அவரின் வாழ்க்கை எவ்வாறு மறுகிறது என்பதே படத்தின் கதை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் விஷாலுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

பல கோடி நஷ்டம்
வீரமே வாகை சூடும் திரைப்படத்திற்கு ஆன செலவு மட்டும் 20 கோடி பட்ஜெட்டாம், ஆனால், இத்திரைப்படத்தின் மூன்று நாள் வசூல் வெறும் 5 கோடி தானாம். கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், படக்குழு என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர். விஷால் சுனைனாவுடன் லத்தி சார்ஜ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











