Veerappan Blue Sattai Maran Review: “செம்ம மேக்கிங்..” கூச முனிசாமி வீரப்பன் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: வீரப்பனின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து கூச முனிசாமி வீரப்பன் என்ற வெப் சீரிஸ் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்த தொடரை பாராட்டியுள்ள ப்ளூ சட்டை மாறன், அது குறித்து பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார்.
வீரப்பன் வெப் சீரிஸ் ப்ளூ சட்டை விமர்சனம்
வீரப்பனின் வாழ்க்கையை பின்னணியாக வைத்து 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற வெப் சீரிஸ் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 6 எபிசோட்களுடன் உருவாகியுள்ள இந்த தொடருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சரத் ஜோதி இயக்கியுள்ள இந்த சீரிஸ்ஸின் ஸ்க்ரிப்ட்டை, ஜெயச்சந்திரா ஹாஷ்மி, பிரபாவதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்த சீரிஸ்க்கு பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

வீரப்பனை பற்றி எத்தனையோ படங்கள், டாக்குமெண்ட்ரி, புத்தகங்கள் வந்திருந்தாலும், 'கூச முனிசாமி வீரப்பன்' ரொம்பவே வித்தியாசமாக உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். வீரப்பன் கொடுத்த பேட்டிகளில் இருந்து அவரே தனது வாழ்க்கையை பற்றி சொல்வதாக இந்தத் தொடர் வந்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார். அதேபோல் வீரப்பனின் பேட்டியுடன் நக்கீரன் கோபாலின் பார்வை, வழக்கறிஞர் பாப்பா மோகன், வழக்கறிஞர் தமயந்தி, சீமான், ஜீவா தங்கவேல், இந்து ராம் உள்ளிட்ட சிலர் பேசியுள்ளதும் மிகச் சரியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாம்.
மொத்தம் 6 எபிசோட்களாக உருவாகியுள்ள வீரப்பன் வெப் சீரிஸ் ரொம்பவே சூப்பரா வந்துருக்கு. முதல் மூன்று எபிசோட் ஒரு க்ரைம் த்ரில்லர் படம் பார்த்த ஃபீல் கொடுக்குற மாதிரி இருக்குது. இந்த சீரிஸ்ல கூடுதலான சுவாரஸ்யம் என்னன்னு சொன்னா, வீரப்பன் தன்னோட வாழ்க்கைல ஏகப்பட்ட சம்பவங்கள்லாம் பண்ணிருக்கார். அந்த சம்பவங்கள் எல்லாம் கேட்கவே பயமா இருக்கு. ஆனா, அத அவரு வாயால சொல்லும் போது அவ்ளோ அசால்ட்டாவும் சுவாரஸ்யமாவும் இருக்குது.
குறிப்பா வீரப்பன் தேடுதல் வேட்டைக்கு ராம்போ கோபால கிருஷ்ணன் என்ற அதிகாரி போயிருக்கார். அவர பத்தி சொல்லும் போதெல்லாம் ஆடு களவாணி பையன்னு தான் வீரப்பன் சொல்றார். காட்டுக்குள்ள தன்னை தேடி வரும் போதெல்லாம் யாராவது ஆடு மேய்ச்சிட்டு இருந்தா ஒரு நாலு ஆடுகள புடிச்சி ஜீப்ல தூக்கிப் போட்டு போய்டுவாராம். எதாவது கேட்டா, அவன வீரப்பனுக்கு உதவியா இருக்குறதா சொல்லி மிரட்டுவாராம். இப்படி அட்டூழியம் பண்ண போலீஸ் ஆபிஸர கன்னி வெடி வச்சு கொன்னுட்டதா வீரப்பன் சொல்லும் போது குபீர்ன்னு சிரிப்பு வந்துடுச்சு.
இந்த மாதிரி பல காட்சிகள் சுவாரஸ்யமா இருந்ததாகவும், ஆக்ஷன் காட்சிகளை வீரப்பனே நடித்துக் காட்டியதும் சிறப்பாக இருந்ததாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வீரப்பனால் கொல்லப்பட்ட காவல் அதிகாரியின் மகளின் பேட்டியும், வீரப்பனின் மகள் வருத்தத்துடன் பேசியதும் ரொம்பவே உருக்கமா இருந்தது. கடைசி 3 எபிசோட்ஸ் எல்லாமே ரொம்ப சீரியஸ்ஸா இருப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை என்ற பெயரில் மக்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல், சதாசிவம் கமிஷன் அறிக்கை குறித்த பார்வையும் நன்றாக வந்துள்ளது. இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் வீரப்பனை சுட்டுக் கொன்ற போலீஸ் அதிகாரிகளுக்கு 107 கோடி ரூபாய் மதிப்பில் பரிசுகளும் பதக்கங்களும் கொடுக்கப்பட்டதை இந்த சீரிஸ் ஆவணப்படுத்தியுள்ளதாம்.
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் கடத்தல் குறித்து மேம்போக்காகவே இருப்பதாகவும், வீரப்பனின் பேட்டியில் அவர் குறிப்பிட்ட பலரது பெயர்கள் மியூட் செய்யப்பட்டுள்ளதன் பின்னணியும் ப்ளூ சட்டை மாறன் விளக்கம் கொடுத்துள்ளார். சீசன் 2ல் இன்னும் பல தகவல்கள் கிடைக்கும் எனவும், முதல் சீசன் 4 மணி நேரத்துக்கும் அதிகமாக இருந்தாலும் போர் அடிக்காமல் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவாக விமர்சனம் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











