twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீரப்பன் குடும்பத்தார் வேண்டுகோள்... யோகி பாபு படத்தின் தலைப்பு மாற்றம் !

    |

    சென்னை: யோகி பாபுவை யூடியூபராக களம் இறக்கும் 'வீரப்பனின் கஜானா' படத்தில் திடீர் மாற்றம் . ராட்சசி' பட இயக்குநர் சை கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கும் 'வீரப்பன் கஜானா' காடுகளின் பெருமையை திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.

    இப்படத்தில் யோகி பாபு இதுவரை நடித்திராத வேடம் ஒன்றில் நடிக்கிறார். ஆம், யோகி பாபு முதல் முறையாக யூடியூபர் வேடத்தில் நடிக்கிறார். எந்த வேடமாக இருந்தாலும், அதில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் யோகி பாபு, தற்போது டிரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை கலாய்த்து தள்ளுவதற்கு தயாராகி விட்டார்.

    கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்; பொன்னியின் செல்வன் 2 பாக ஷூட்டிங்கை முடித்த ஜெயம் ரவி ட்வீட்!கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்; பொன்னியின் செல்வன் 2 பாக ஷூட்டிங்கை முடித்த ஜெயம் ரவி ட்வீட்!

    யோகி பாபு நடிக்கும் கதாப்பாத்திரம் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதோடு, அவர்களிடம் கூடுதல் கவனம் பெரும் விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மொட்டை ராஜேந்திரனும் இணைந்திருப்பதால், இவர்களுடைய கூட்டணியின் காமெடி காட்சிகள் ரொம்ப தூக்கலாகவே வந்திருக்கிறதாம்.

    சுட்டுக் கொல்லப்பட்ட

    சுட்டுக் கொல்லப்பட்ட

    இப்படம் பற்றி வெளியாகும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களிடமும், திரையுலகினரிடமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது படத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற உள்ளது. 'வீரப்பனின் கஜானா' என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும், இப்படத்தின் கதைக்கும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    Recommended Video

    Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL
    காடு

    காடு

    முழுக்க முழுக்க சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும், பெரியவர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் காட்டையும், அதனைச் சார்ந்த விஷயங்களையும் சுவாரஸ்யமாக சொல்லும் வகையில் தான் இப்படத்தின் திரைக்கதையும், காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    வேண்டுகோள் விடுத்து

    வேண்டுகோள் விடுத்து

    ஆனால், படத்தின் தலைப்பு தொடர்பாக படக்குழுவினரை தொடர்பு கொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்த வேண்டாம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று படக்குழுவினர் 'வீரப்பனின் கஜானா' என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர். எனவே, இப்படத்தின் புதிய தலைப்பு, இதைவிட சுவாரஸ்யமான தலைப்பாக விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

    பஞ்சம் வைக்காமல்

    பஞ்சம் வைக்காமல்

    காடுகள் என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதுவும் குழந்தைகள் என்றால், காடுகளைப் பற்றி கேட்கவும் காட்சிகளாக பார்க்கவும் உற்சாகமாகிவிடுவார்கள். அந்தக் காட்டின் பெருமையை பேன்டஸி, காமெடி, த்ரில்லர் கலந்து பொழுதுபோக்கிற்கு பஞ்சம் வைக்காமல் பேசும் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் குழந்தைகள் ரசிக்கும் அளவுக்கு காட்டு விலங்குகளையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

     யூத் காம்போவுடன்

    யூத் காம்போவுடன்

    விலங்கு நல அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விலங்குகள் வரும் காட்சிகள் அனைத்தும் குழந்தைகளை குஷிப்படுத்தும் என்பது உறுதி. ஃபோர் ஸ்கொயர்ஸ் ஸ்டுடியோஸ் பிரபாதீஸ் ஷாம்ஸ் தயாரிக்க, ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா என யூத் காம்போவுடன், யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனின் காம்போவால் இப்படம் பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்.

    படத்தின் வி.எஃப்.எக்ஸ்

    படத்தின் வி.எஃப்.எக்ஸ்

    அடர்ந்த காடுகளிலும், காடுகள் சார்ந்த பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி, தளக்கனம், நாகர்கோவில் உள்ளிட்ட இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடைபெற்றது. தற்போது படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளன. கலகலப்பான காமெடி படமாக இருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகவும் படம் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணி படத்தில் முக்கிய பங்கு வகிப்பதோடு, பெரும் பாராட்டு பெறும் விதத்திலும் இருக்கும், என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    இமேஜை டெவலப்

    இமேஜை டெவலப்

    யோகி பாபு 2021 ஆம் ஆண்டுக்கு வரிசையாக பல படங்கள் அடுக்கி வைத்துள்ளார் . அதிலும் குறிப்பாக தனக்கே உரித்தான காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல நல்ல திரைக்கதைகளை கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். வித்தியாசமான இயக்குனர்கள் வித்தியாசமான கதைகள் சுவாரசியமான காமெடி கதாபாத்திரங்கள் என்று தன் இமேஜை எப்படியெல்லாம் டெவலப் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் செய்து வருகிறார்.

    கடைசி காட்சியில்

    கடைசி காட்சியில்

    சமீபத்தில் நவரசா படத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ஹாஸ்யம் என்னும் உணர்வை கொண்டு யோகி பாபு நடித்த குறும்படம் மாறுபட்ட கருத்துகளை சந்தித்து வந்தது .அதிலும் குறிப்பாக ஜாதி ரீதியான வசனங்கள் அதிகம் இருப்பதாக அந்த குறும்படம் பேசப்பட்டது .இருந்தாலும் படத்தின் கடைசி காட்சியில் யோகி பாபுவுடைய நடிப்பு மற்றும் முக்கியமான தருணங்களில் சிரிக்கவைத்த காட்சிகள் மிகவும் பாராட்டைப் பெற்றது.

    ஆண்டு இறுதிக்குள்

    ஆண்டு இறுதிக்குள்

    இப்படி தொடர்ந்து பல வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து யோகிபாபு நடித்து வருகிறார் தன்னை தானே கிண்டல் செய்து கொண்டு மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் ஒரு கில்லாடியாக யோகி பாபு திகழ்கிறார் . இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைய வெற்றிப் படங்களை யோகி கொடுப்பார் என்று யோகிபாபு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள்.காமெடி படங்கள் தமிழ் சினிமாவில் நிறைய வர சரியான தருணம் இதுதான் என்பதை நன்கு புரிந்து கொண்டு பல முன்னணி இயக்குனர்கள் காமெடி ஸ்கிப்ரிட்ஸ் தேர்ந்தெடுத்து இயக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Gowthamraj, who debuted with Jyotika-starrer Raatchasi, is working on his next directorial, he has penned the script for an adventure comedy, titled Veerappanin Gajana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X