பெண்களும் குடிக்கிறார்கள்.. மாவீரன் பிள்ளை இசைவெளியீட்டு விழாவில் வீரப்பன் மகள் அதிரடி பேச்சு!

சென்னை : வீரப்பனின் மகள் மாவீரன் பிள்ளை படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன் இசைவெளியீட்டு விழாவில் பேசிய வீரப்பனின் மகள், பெண்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவது குறித்து அதிரடியாக பேசினார்.

கே.என்.ஆர் மூவீஸ் சார்பில் கே.என்.ஆர். ராஜா அவரே கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ள திரைப்படம் மாவீரன் பிள்ளை.

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில்,வாணிபோஜன், விஜி சந்திரன், பிரேம், இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

வீரப்பனின் மகள் பேச்சு

வீரப்பனின் மகள் பேச்சு

இதில் கலந்து கொண்டு பேசிய வீரப்பனின் மகள் விஜயலட்சுமி, எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது. எட்டாவது படிக்கும் போதே ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், படித்துக்கொண்டு இருந்ததால் அம்மா நடிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். திருமணமான பிறகு கே.என்.ஆர் ராஜா இந்த படத்தின் கதையை என்னிடம் கூறினார். கதை எனக்கு பிடித்துவிட்டதால் நடிக்க சம்மதித்தேன்.

ஒழுக்கத்தில் சிறந்தவர் என் அப்பா

ஒழுக்கத்தில் சிறந்தவர் என் அப்பா

என் அப்பா தனி மனித ஒழுக்கத்தில் சிறந்தவராக இருந்தார். அவருடைய மகளான நான் குடிக்கு எதிரான ஒரு படத்தில் நடிப்பதை நினைத்து பெருமை அடைகிறேன். இந்த படத்தை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும், கஷ்டப்பட்டு பெற்று வளர்க்கும் மகன் குடியால் வாழ்க்கையை இழந்து தவிக்கும் போது எப்படி வேதனை அடைகிறார்கள் என்பதை இந்த படம் விளக்கி உள்ளது.

பெண்களும் குடிக்கிறார்கள்

பெண்களும் குடிக்கிறார்கள்

இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக காரணம் தெருக்கு தெரு இருக்கும் மதுக்கடைகள் தான். படிப்படியாக மதுவை ஒழிப்போம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால்,யாரும் அதற்காக எந்த முயற்சியையும் செய்யவில்லை. இப்போது இளைஞர்கள் மட்டுமில்லாமல் பெண்களும் குடிக்க தொடங்கிவிட்டார்கள். மது சமுதாயத்திற்கு எவ்வளவு தீங்கானது என்பதை உணர்த்துவது தான் இந்த படம்.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் தெருக்கூத்து கலைஞராக ராதா ரவி நடித்துள்ளார். இப்படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய,ரவி வர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X