‘கூச முனிசாமி வீரப்பன்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு!!
'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது
இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் ..
ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது..
6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள். பிரபா மூலம் தான் இந்த சீரிஸ் நடந்தது. அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய எஸ் ஆர் பிரபு சாருக்கும் நன்றி. முக்கியமாக மூன்று பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் மூவர் தான் இந்த சீரிஸின் கிரியேட்டிவ் டீம். ஜெய்சந்திர ஹாஸ்மி, இவர் தான் இந்த சீரிஸுக்காக முதன் முதலில் பேசினார். இந்த சீரிஸை எழுதியிருக்கிறார். சமீபத்திய லேபிள் சீரிஸிலும் இவர் எழுதியிருக்கிறார். வசந்த் ரிசர்ச் ஹெட் எல்லா ரிசர்ச்சும் இவர் தான் செய்தார். மூன்றாவதாக சரத், இவர்கள் மூவரும் தான் இந்த சீரிஸ் உருவாகக் காரணம். மேலும் இதில் உழைத்த எல்லோருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் பிரபாவதி பேசியதாவது..
இது எனக்கு மிக முக்கியமான மேடை. என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது என் தந்தை தான். என் சிறு வயதில் அப்பா கிளம்பும்போது வீடே அழும், ஏன் எனக் கேட்பேன். அப்பா வீரப்பனைப் பார்க்கப் போகிறார், அவர் யானையைக் கொன்றவர் மனிதர்களைக் கொன்றவர் என்றார்கள். அவரை ஏன் அப்பா பார்க்கப் போக வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒரு நாள் காட்டில் இருந்து வந்து மயிலிறகு தந்து, வீரப்பன் தந்ததாக சொன்னார். வீரப்பன் எப்படி இவ்வளவு எளிமையான மனிதராக இருக்க முடியும் எனத் தோன்றியது. கல்லூரி காலத்தில் தான் அவரைப் பற்றி முழுதாக தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒரு நாள் அவரது கதையை படமாக்க வேண்டும் என நினைத்தேன். அப்பாவிடம் கேட்ட போது எனக்கு தான் நிறைய டெஸ்ட் வைத்தார். இதை செய்தால் முறையாகச் சரியாகச் செய்ய வேண்டும் என்றார். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. இதைத் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் எஸ் ஆர் பிரபு சாரிடம் போனேன் அவர் மிக ஆதரவாக எல்லாம் சொல்லித்தந்தார். எங்களுக்குக் கனவிருக்கலாம் ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு ஷாம், கௌஷிக், ZEE5 யிலிருந்து பெரிய ஆதரவைத் தந்தார்கள். ஜெய், வசந்த் இருவரும் தான் என் கனவிற்குத் துணையாக இருந்தார்கள். எங்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து எங்களுடன் உழைத்து உருவாக்கிய சரத்துக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராஜ் காட்டுக்குள் அவரது உழைப்பு பெரியது. இசையமைப்பாளர் சதீஷ் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதில் நிறையப்பேர் உயிரைத்தந்து உழைத்துள்ளனர். சீமான், என் ராம் சார் என எங்கள் மீது அக்கறை கொண்டு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. வீரப்பனுடன் இருந்த சித்தன் அவர்களை நக்கீரன் சரணடைய வைத்தது. இப்போது அவரின் எளிமையான வாழ்வை தீரன் புரடக்சன்ஸுக்காக படம்பிடித்தது பெருமை. நல்ல படைப்பிற்கு ஆதரவு தரும் நீங்கள் எங்கள் படைப்பிற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நக்கீரன் கோபால் பேசியதாவது..
ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம். இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த ZEE5 க்கு நன்றி. இது நக்கீரனின் 30 வருட உழைப்பு, எனக்கு வீரப்பனைப் பிடிக்கும் வீரப்பனுக்கு என்னைப் பிடிக்கும் ஆனால் எந்த இடத்திலும் நக்கீரன் வீரப்பனுக்கு ஆதரவாக ரிப்போர்ட் செய்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தான் நாங்கள் நின்றோம். வீரப்பனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பல கஷ்டங்களுக்கு பிறகு 1996 ல் அவரை வீடியோவில் கொண்டு வந்தோம். அதை அத்தனையையும் இவர்களிடம் தந்து இதைச் சரியாகக் கொண்டு வந்து விடுங்கள் என்று மட்டும் சொன்னேன். அதை மிகச் சரியாகச் செய்து விட்டார்கள். இதில் உழைத்த கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும் ZEE5 க்கும் நன்றி.


Click it and Unblock the Notifications











