அங்காடித்தெரு... மகேஷின் அடையாளத்தை மாற்ற நினைக்கும் இயக்குனர்!
அங்காடித் தெரு மகேஷ் நடிக்கும் வீராபுரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் செங்கல்பட்டு அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை: வீராபுரம் படத்திற்கு பிறகு அங்காடிதெரு மகேஷின் அடையாளம் மாறும் என்று அப்படத்தின் இயக்குனர் செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ வைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத்தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கும் படம் "வீராபுரம்".

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. அங்காடித்தெரு மகேஷ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக உறுதிகொள் மேகனா நடிக்கிறார்.
மணல் கொள்ளையால் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் வீராபுரம் திரைப்படம், சமூக பிரச்சினையை பற்றி பேசுகிறது. அத்துடன் இணைந்த ஒரு மெல்லிய காதலும் படத்தில் இருக்கிறது.
இதுவரை நடித்திடாத ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்க்குப் பிறகு மகேஷ் மிகச்சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் வீராபுரம் மகேஷ் என்று அழைக்கப்படுவார் என்றும் இயக்குனர் செந்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பிரேம்குமார், இசையமைப்பாளர்களாக ரிதேஷ் மற்றும் ஸ்ரீதர், எடிட்டராக கணேஷ்குமார் மற்றும் சண்டைப்பயிற்சியாளராக எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











