பேய் பட சீசனில் அடுத்து சித்தார்த்... அருவம் படத்தின் சிங்கிள் வீசிய விசிறி ரிலீஸ்

சென்னை: நடிகர் சித்தார்த் நடித்துள்ள அருவம் திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதியன்று வெளியாகவுள்ளது. இப்போது இந்த விருந்துக்கு முன்பு, படக்கூழுவினர் இன்னும் ஒரு அழகான விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். படத்தின் முதல் பாடல், வீசிய விசிறி என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். மேலும் இந்த பாடல் இன்று ரிலீஸ் ஆகிறது.

இயக்குனர் சாய் சேகர் எழுதி இயக்கி வரவிருக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம் தான் அருவம். இந்த திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் கேத்தரின் தெரேசா ஆகியோர் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். மேலும் சதீஷ் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் துணை நடிகராக முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Veesiyavisiri single Song release From Aruvam

ட்ரைடென்ட் ஆர்ட்ஸின் ஆர்.ரவீந்திரனுடன் இணைந்து க்ளீம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் சவுந்தர்யா மற்றும் தீபா ஐயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். என்.கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு, செய்ய தேசிய விருது வென்ற பிரவீன் கே.எல் எடிட்டிங்க செய்ய ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணிபுரிகிறார்கள். இத்திரைப்படத்தில் ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சியாளராக பணியாற்றுவதோடு வில்லனாகவும் நடிக்கிறார்.

கடந்த ஜூன் மாதத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. உண்மையில் இந்த படம் எதைப் பற்றியது என்பதை அறிந்து கொள்ளும் உற்சாகத்தை இதன்மூலம் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இது திகில் மற்றும் பேய் படங்களின் சீசன் என்பதால், அருவம் படமும் அந்த பாதையிலேயே பயணிக்கிறது.

இது பற்றி இத்திரைப்படத்தின் இயக்குநர் சாய் சேகர் கூறும்போது, திகில் படங்கள் என்பவை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. ஆனால், அருவம் திரைப்படம், அந்த வகை படங்களில் இதுவரை பார்க்காத ஒரு வித்தியாசமான களத்தில் அதன் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் என்றார்.

Veesiyavisiri single Song release From Aruvam

இப்போது, படக்குழுவினர் இந்த திரைப்படத்தின் வெளியிடும் தேதியை அறிவித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்போது இந்த விருந்துக்கு முன்பு, படக்கூழுவினர் இன்னும் ஒரு அழகான விருந்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல், வீசிய விசிறி என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X