Pragathi: 47வயதில் இரண்டாவது திருமணம்.. பிரபல நடிகை குறித்து வெளியான செய்தி!

சென்னை: நடிகை பிரகதி மகாவதி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை பிரகதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

Veetla Visheshanga actress pragathi mahavadi get ready for second marriage

தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகை பிரகதி மகாவதி: பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரகதி, தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அம்மா கேரக்டரில் நடித்தாலும், வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னைவிட்டு போகல என்ற வசனம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும். இந்த வயதுலையும் அம்சமாக இருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவ்: நடிகை பிரகதி மார்டன் உடையில் கலர் கலர் புகைப்படங்களை வெளியிடுவது, ஹிட் பாட்டுக்கு ஆட்டம் போடுவது என இணையத்திலேயே பிஸியாக இருக்கிறார். பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால், ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரகதி போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கருத்துவேறுபாடு: தன்னுடைய இருபதாவது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரகதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து, தனி ஒருத்தியாக போராடி இன்று இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.

விரைவில் திருமணமா?: இந்நிலையில், டோலிவுட் திரையுலகை சேர்ந்த தயாரிப்பாளர் ஒருவரை பிரகதி காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெலுங்கு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்த செய்தியால், கடுப்பான பிரகதி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதாரம் இல்லாமல் செய்தி வெளியிட்ட தெலுங்கு தொலைக்காட்சியை கிழிகிழி என்று கிழித்துவிட்டார். நடிகை என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாமா என்று அந்த தொலைக்காட்சியை வன்மையாக கண்டித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X