For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆர் ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு எப்போது... புதிய அப்டேட்!

  |

  சென்னை : காமெடியனாக அறிமுகமாகி இப்பொழுது இயக்குனராக உருவெடுத்துள்ள ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் நயன்தாரா அம்மனாக நடித்திருப்பார்.

  திரையரங்கில் வெளியாக இருந்த மூக்குத்தி அம்மன் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில் அதை அடுத்து பிரபல ஹிந்தி படத்தின் ரீமேக்கில் ஆர் ஜே பாலாஜி நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

  கர்ப்பமான மார்வெல் நடிகை.. கன்ஃபார்ம் பண்ண கணவர்.. ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு குவியுது வாழ்த்து!கர்ப்பமான மார்வெல் நடிகை.. கன்ஃபார்ம் பண்ண கணவர்.. ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு குவியுது வாழ்த்து!

  இப்பொழுது அது உறுதியாக இருக்க ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்பது பற்றிய முக்கிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

  கலகல பேச்சு

  கலகல பேச்சு

  பட்டாசு போல வெடிக்கும் பேச்சு பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் கலாய்க்கும் கலகல பேச்சு என பிரபல ரேடியோ நிறுவனத்தில் ஆர்ஜே வாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த ஆர்ஜே பாலாஜி சுந்தர் சியின் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தின் மூலம் காமெடியனாக சினிமாவில் அறிமுகமானார் . அதைத்தொடர்ந்து தொடர்ந்து சில ஹீரோக்களின் குறிப்பிடக்கூடிய சில படங்களில் நடித்து இருந்தாலும் விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் உருவான நானும் ரவுடி தான் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. சாதாரண காதல் கதையை எடுத்துக்கொண்டு அதில் முழுக்க முழுக்க காமெடி மற்றும் காதல் சென்டிமெண்டை கலந்து விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த நானும் ரவுடி தான் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு இதில் ஆர் ஜே பாலாஜி யின் காமெடி வசனங்கள் மிகப் பிரபலமானது. நானும் ரவுடிதான் வெற்றி பெற்றதை அடுத்து ஒரு சில படங்களிலேயே இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

  மூக்குத்தி அம்மன்

  மூக்குத்தி அம்மன்

  இப்பொழுது நாட்டில் உள்ள அரசியலை கலாய்த்து எல்கேஜி என்ற படத்தின் கதையை ஆர் ஜே பாலாஜி எழுதி இருக்க இவரது நண்பரும் இயக்குனருமான கே ஆர் பிரபு இயக்கி இருந்தார். வெகுளித்தனமான நடிப்பு அரசியலை அக்குவேறு ஆணிவேறாக பிரித்த கதை களம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தைக் கொடுத்த எல்கேஜி திரைப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. பாக்ஸ் ஆபீசிலும் இப்படம் ஹிட்டடித்தது. இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடித்திருந்தார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்திருந்த இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பல மடங்கு லாபத்தை கொடுத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து ஐசரி கணேஷ் மூக்குத்தி அம்மன் என்ற படத்தை தயாரித்திருந்தார். முன்பெல்லாம் வருடத்திற்கு இரண்டு மூன்று அம்மன் படங்களாவது வெளியாகும் ஆனால் சமீபகாலமாக தமிழில் அம்மன் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் வெளியானது. இதில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில் முதல் முறையாக நடித்திருப்பார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான அம்மன் படங்களிலேயே மிக வித்தியாசமாகவும் காமெடி கலந்த கதை களத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. திரையரங்கில் வெளியாக தயாராக இருந்த மூக்குத்தி அம்மன் திடீரென பரவிய கொரோனா பரவல் காரணமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

  பதாய் ஹோ தமிழ் ரீமேக்

  பதாய் ஹோ தமிழ் ரீமேக்

  இவ்வாறு தொகுப்பாளர்,காமெடியன், இயக்குனர்,ஹீரோ என பல முகங்களை கொண்டுள்ள ஆர்ஜே பாலாஜி சூப்பர் ஹிட் இந்தி படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்து ஹீரோவாக நடிக்கவும் உள்ளார். இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ பெரும் வரவேற்ப்பை பெற்றது. வயதான அம்மா கர்ப்பமான பிறகு அவரது 28 வயது மகன் சந்திக்கும் சிக்கல்களை படம் எடுத்துக்கூறுவதாய் அமைந்தது. முழுக்க முழுக்க இந்தி ரசிகர்களின் ரசனைக்கேற்ப வெளியான இந்த திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் ரீமேக்கில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் ஆர் ஜே பாலாஜி நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

  அடுத்த வாரம் கோயம்புத்தூரில்

  அடுத்த வாரம் கோயம்புத்தூரில்

  சூரரைப் போற்று மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு தண்ணியாக மாறிய அபர்ணா பாலமுரளி தமிழில் மிகப் பெரிய வரவேற்பு இருப்பதால் ஏற்கனவே அசோக் செல்வன் உடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்பொழுது ஆர்ஜே பாலாஜி நடிக்கும் பதாய் ஹோ தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில் படப்பிடிப்பு பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் கோயம்புத்தூரில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு "வீட்ல விசேஷங்க" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். சத்யராஜ் மற்றும் ஊர்வசி இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 28 வயதில் மகன் இருக்கும் போது அம்மா கர்ப்பமானால் எவ்வாறான சிக்கல்களை எல்லாம் சந்திப்பார் என்பதை மிகவும் நகைச்சுவை உடன் இப்படம் உருவாக உள்ளது.

  English summary
  The Tamil remake titled 'Veetla Visheshanga' has Aparna Balamurali playing RJ Balaji's pair. Sathyaraj and Oorvashi will be playing his parents in the film
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X