அண்ணாத்த படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்.. இங்கேயும் லிஸ்ட் பெருசா போகுதே.. என்ன ரோலா இருக்கும்?
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படத்தின் தலைப்பு ஏற்கனவே கெஸ் பண்ண மாதிரி "அண்ணாத்த" என்பது அதிகாரப் பூர்வமாக நேற்று வெளியானது.
Recommended Video
ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்தில் புதிதாக இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளார்.
நம்ம வீட்டு பிள்ளை படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளார்.

பிரபல எழுத்தாளர்
குற்றப் பரம்பரை, பட்டத்து யானை மற்றும் குருதி ஆட்டம் என பல பிரபல நாவல்களை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. சூர்ய வம்சம் படத்தில், பேருந்தில் பயணிக்கும் பயணியாக நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி, கிடாரி, மதயானைக் கூட்டம், சேதுபதி, நம்ம வீட்டுப் பிள்ளை என பல படங்களில் நடித்து வருகிறார்.

கிராமத்தான்
கிராமத்து கதைகளுக்கு ஏற்ற கிராமத்தான் லுக் வேல ராமமூர்த்திக்கு கச்சிதமாக பொருந்தி போகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில், நெகட்டிவ் ரோலில் நடித்த வேல ராமமூர்த்தி, அண்ணாத்த படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
வணக்கமுங்கோ
அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை சந்தித்தார் வேல ராமமூர்த்தி. பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, ரஜினியை பார்த்து, வணக்கம் வைக்க, பதிலுக்கு ரஜினியும் வணக்கமுங்கோ என வணக்கம் வைத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

லிஸ்ட் பெருசு
சமீபத்தில் உருவாகும் படங்களின் நடிகர்கள் பட்டாளம் கூடிக் கொண்டே போகின்றன. தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, அண்ணாத்த படத்திலும், ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் நடித்து வருகின்றனர். பெரிய நடிகர்கள் படங்கள் என்பதால், நட்சத்திர நடிகர்களும், தயக்கம் காட்டாமல், ஓகே சொல்லி விடுகின்றனர்.

என்ன ரோல்?
ரஜினியின் அண்ணாத்த படத்தில், பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஆனால், அவர் வில்லனாக நடிக்கவில்லை என்ற தகவல்கள் கசிந்துள்ளன. காலா, 2.0, தர்பார் போல, இந்த படத்திலும் பாலிவுட் நடிகரை வில்லனாக முயற்சித்து வருகின்றனர். அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கு துணையாக இருக்கும் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











