twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலைக்காரன் 25 நாட்களில் ரூ 25 கோடி வருமானம்!

    By Shankar
    |

    சிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி நடித்த படம் வேலைக்காரன். சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் சுமார் 45 கோடி வரை விநியோகஸ்தர்களிடம் வியாபாரம் செய்யப்பட்டிருந்தது.

    மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்த படம்.120 கோடி இந்திய மக்களை தங்கள் தயாரிப்பு பொருட்களை விற்கும் சந்தையாக மாற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் முயற்சியை அம்பலபடுத்திய படம் 'வேலைக்காரன்' மசாலா படங்களில் நடித்து வந்த மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயன். இவர் கார்ப்பரேட் கம்பெனி கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசம் பேசி நடித்தது தமிழ் சினிமாவுக்கு புதுசு.

    Velaikkaran earns Rs 25 cr

    படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் பொதுவெளியில் எழுந்தாலும் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் வேலைக்காரன் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நிறைவான வசூலை குவித்த ரஜினி முருகன் படத்திற்கு இணையாக வேலைக்காரன் வருமானத்தை ஈட்டியிருக்கிறது.

    அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட வேலைக்காரன் திரைப்படத்திற்கு கேளிக்கை வரி, ஜிஎஸ்டி பிடித்தம் போக விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளருக்கு 25 கோடி ரூபாய்க்கு மேல் வருமானத்தை (லாபம்) பெற்று தந்த படமாக உள்ளது. இயக்குநரின் திட்டமிடல் கோளாறு காரணமாக படத்தின் தயாரிப்பு செலவு கூடியிருக்கிறது.

    வேலைக்காரன் பட தயாரிப்பில் தேவையற்ற செலவுகள் கட்டுபடுத்தப்பட்டிருந்தால் முதல் வாரத்திலேயே வெற்றிப் படமாகியிருக்கும்.

    English summary
    Sources from Box Office revealed that Velaikkaran movie has gained a revenue of Rs 25 cr in 25 days.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X