வேலைக்காரன் படம் சூப்பர், பாராட்டி 'யு' சான்றிதழ் கொடுத்த சென்சார் போர்டு
சென்னை: எந்த காட்சியையும் கத்தரி போடாமல் வேலைக்காரன் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் வரும் 22ம் தேதி ரிலீஸாகிறது.

முன்னதாக படம் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் இம்பிரஸ் ஆகி கத்தரி போடாமல் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மேலும் படத்தை சென்சார் போர்டு அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தனி ஒருவனை போன்று வேலைக்காரன் படமும் மக்களுக்கு மெசேஜ் சொல்லுமாம்.
குடிசைப் பகுதியை சேர்ந்த ஒருவர் ஊழலுக்கு எதிராக போராடுவது கதையாம். இந்த படம் அரும்பாடு படும் உழைக்கும் வர்க்கத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்று வேலைக்காரன் குழு தெரிவித்துள்ளது.
Comments


Click it and Unblock the Notifications