Don't Miss!
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சக்க போடு போடு ராஜா, வேலைக்காரனில் எது பெஸ்ட்: சந்தானம் சொல்வதை கேளுங்கோ
சென்னை: சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களில் எது பெஸ்ட் என்று பதில் அளித்துள்ளார் சந்தானம்.
காமெடியனாக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த சக்க போடு போடு ராஜா சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தோடு சேர்ந்து ரிலீஸானது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சந்தானம் கூறியதாவது,
வேலைக்காரன்
சக்க போடு போடு ராஜா, வேலைக்காரன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸாகியுள்ளதே தவிர யாருக்கும், யாரும் போட்டி கிடையாது என்றார் சந்தானம்.
சிவகார்த்திகேயன்
இரண்டு படத்தில் எது பெஸ்டா இருக்கிறது என்ற கேள்விக்கு, இது என்னங்க கதை. யாரை கேட்டாலும் அவங்க படத்தை தான் சொல்வாங்க என்று வேலைக்காரன் பற்றி தெரிவித்தார் சந்தானம்.
ரஜினி
கமல் ஹாஸன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாரை ஆதரிப்பீர்கள் என்று சந்தானத்திடம் கேட்கப்பட்டது. முதலில் அவர்கள் அரசியலுக்கு வரட்டும். வந்த பிறகு அவர்கள் என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்வார்கள். அதை பார்த்த பிறகே சொல்ல முடியும் என்று சந்தானம் தெரிவித்தார்.
வரலாம்
நடிகர்கள் அரசியலுக்கு வரலாம். அதில் தப்பே இல்லை. எனக்கு அரசியலுக்கு வரும் ஐடியா இப்போதைக்கு இல்லை. முதலில் கமல் சார், ரஜினி சார் வரட்டும் என சந்தானம் கூறினார்.
போட்டி
வடிவேலு மீண்டும் நடிக்க வந்துவிட்டார். உங்களுக்கும், அவருக்கும் இடையே போட்டி இருக்குமா என்ற கேள்விக்கு, நான் தான் ஹீரோவாகிவிட்டேனே, எனக்கும், அவருக்கும் ஏன் போட்டி வரப் போகிறது. நான் ஏன் மீண்டும் காமெடியனாக போகணும். தொடர்ந்து ஹீரோவாக நடிப்பேன் என்றார் சந்தானம்.