வேலைக்காரன் படத்தில் சிவா, நயன்தாரா பேர் என்ன தெரியுமா? #VelaikkaranMotionPoster
Recommended Video

சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று இரவு வெளியிடப்பட்டது.
'வேலைக்காரன்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் அனைத்துப் பாடல்களும் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.
இந்நிலையில், வேலைக்காரன் படத்தில் நடித்த நடிகர்களின் கேரக்டர் பெயர்களை வெளியிட்டு மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளது வேலைக்காரன் படக்குழு.
மோஷன் போஸ்டர்
நேற்று இரவு 'வேலைக்காரன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டரில் 'வேலைக்காரன்' படக்குழுவினரை அறிமுகப் படுத்தியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் - நயன்தாரா
வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில் கதாபாத்திரங்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 'அறிவு' எனும் கேரக்டரிலும், நயன்தாரா 'மிருனாளினி' எனும் கேரக்டரிலும் நடிக்கிறார்கள்.
சினேகா நடிக்கிறார்
ஃபகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். அவர்களது கதாபாத்திரங்களின் பெயர்களும் இந்த மோஷன் போஸ்டரில் வெளியாகியுள்ளன.

நட்சத்திரப் பட்டாளம்
ரோஹிணி, விஜய் வசந்த், சார்லி, ரோபோ சங்கர், முண்டாசுப்பட்டி ராமதாஸ், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா, காளி வெங்கட், அருள்தாஸ், மைம் கோபி, மன்சூர் அலிகான், வினோதினி, ஒய்.ஜி.மகேந்திரன், உதய் மகேஷ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடிக்கிறது.
இசை வெளியீட்டு விழா
'வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருக்கும் 'கருத்தவன்லாம் கலீஜாம்...' மற்றும் 'இறைவா' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் அனைத்துப் பாடல்களும் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டன.

தயாரிப்பு
மோகன் ராஜா இயக்கியிருக்கும் இந்தப் படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்திருக்கிறார். ரூபன் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











