நயன்தாராவை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்... -'வேலைக்காரன்' காமெடி ப்ரொமோ!
சென்னை : மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த வாரம் டிசம்பர் 22-ம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள படம் 'வேலைக்காரன்'. இந்தப் படத்துக்கு மக்களிடையே நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் செம ஹிட் ஆகியுள்ளன. 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
அடுத்த வாரத்தில் அரையாண்டு பரீட்சை முடிவதால் வேலைக்காரன் படத்தை குடும்பத்துடன் கொண்டாடக்கூடிய வகையில் ரிலீஸ் செய்கிறார்கள். வேலைக்காரன் படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
வேலைக்காரன்
'தனி ஒருவன்' படத்துக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவரும் படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு விமர்சகர்களிடைய உருவாகியுள்ளது. தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தின் பெருமை பேசும் படமாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
காமெடி ப்ரொமோ
'வேலைக்காரன்' படத்தின் 15 விநாடி ப்ரொமோ வீடியோக்கள் இன்று வெளியிடப்பட்டன. காமெடி ப்ரொமோவில், சிவகார்த்திகேயனும், ரோபோ ஷங்கரும் சேர்ந்து நயன்தாராவை ஏமாற்றும் காட்சி இந்த ப்ரொமோவில் இடம்பெற்றிருக்கிறது.
சீரியஸ் ப்ரொமோ
'நீ எவ்வளவு பெரிய முதலாளியா இருந்தாலும் பார்க்கமாட்டேன்.. ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பேன்' என சிவகார்த்திகேயன் கோபமாகப் பேசும் வசனம் இந்த ப்ரொமோவில் இடம்பெற்றிருக்கிறது.

சிவாவுக்கு நல்ல பிரேக்
'வேலைக்காரன்' படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும் இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து வருகின்றனர். சிவாவுக்கு இந்தப் படம் பெரிய ப்ரேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











