சிவகார்த்திகேயன் இருந்தும் வேலைக்காரனில் மோகன்ராஜா பார்த்த வேலையை பார்த்தீங்களா?

By Siva

சென்னை: வேலைக்காரன் படத்தை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ஒரு விஷயத்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், ஃபஹத் ஃபாசில், சினேகா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படம் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

காமெடி

காமெடி

காதல், காமெடி என்று இருந்த சிவகார்த்திகேயனை வேலைக்காரன் மூலம் வித்தியாசமாக காட்டியுள்ளார் மோகன் ராஜா. தமிழ் ரசிகர்களை ஃபஹத் தனது நடிப்பால் பெரிதும் கவர்ந்துவிட்டார்.

ஃபஹத் ஃபாசில்

ஃபஹத் ஃபாசில்

வேலைக்காரன் பட விளம்பர நிகழ்ச்சிகளில் எல்லாம் சிவகார்த்திகேயன் ஃபஹத் ஃபாசிலின் நடிப்புத் திறனை புகழ்ந்து பேசினார். படம் பார்த்தபோது தான் அவர் சொன்னது புரிந்துள்ளது.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

படத்தில் பெயர் போடுவதற்கு முன்பு வரும் புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு வாசகத்தை சிவகார்த்திகேயன் அல்ல மாறாக நயன்தாரா வாசித்துள்ளார். இது நயன் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இளைய தளபதி

இளைய தளபதி

வேலைக்காரன் படம் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவர் தான் அடுத்த இளைய தளபதி என்கிறார்கள். சிலரோ சிவகார்த்திகேயன் தான் இனி தளபதி என்று கூறி வருகிறார்கள். இது பற்றி சமூக வலைதளங்களில் தனி பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X