For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு: எப்படி இருக்கு?

    By Siva
    |

    சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில், சினேகா, பிரகாஷ் ராஜ், சதீஷ், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன்.

    Velaikkaran Second Look Poster Out

    24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஃபஹத் பாசிலுக்கு பரிசளிப்பது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

    போஸ்டரை வைத்து பார்க்கும்போது சிவாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஃபஹத் நடித்துள்ளார் என்பது தெரிகிறது. தனி ஒருவனை போன்று இல்லாமல் இந்த படத்தில் நயன்தாராவுக்கு வெயிட்டான கதாபாத்திரம் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். வரும் 14ம் தேதி டீஸர் வெளியாக உள்ளது.

    படத்தை சிவா மற்றும் நயன்தாராவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The second look poster of Sivakarthikeyan's upcoming movie Velaikkaran has been released today on the occasion of Fahad Faasil's birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X