அனிருத்தின் 2 இன் 1 மியூசிக் - வேலைக்காரன் படத்தின் இரண்டாவது பாடல் இதோ!
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.
'வேலைக்காரன்' படத்தில் ஒரே பாடலை இரண்டு விதமான எமோஷன்ஸ் சேர்த்து உருவாக்கியிருப்பதாக இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் கூறினார். அந்த அறிவிப்பால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

இந்நிலையில், இன்று 'வேலைக்காரன்' படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் 'இறைவா + உயிரே' பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டு விதமான ஃபீலிங்ஸில் உருவாகியிருக்கிறது இந்தப் பாடல்.
அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள். முதலில் மெதுவாகத் தொடங்கும் பாடல் வெறித்தனமான ராப் இசையாக மாறி மீண்டும் மெதுவாகச் சென்று முடிகிறது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











