»   »  வேலைக்காரனுக்காக அஜ்மீர் தர்காவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வழிபாடு: தீயாக பரவிய போட்டோ

வேலைக்காரனுக்காக அஜ்மீர் தர்காவில் சிவகார்த்திகேயன், நயன்தாரா வழிபாடு: தீயாக பரவிய போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
கண்ணாலேயே சொடக்கு போடும் கீர்த்தி சுரேஷ் -வீடியோ

சென்னை: வேலைக்காரன் படக்குழுவினர் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளனர்.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்து வரும் படம் வேலைக்காரன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி முதல் அஜ்மீரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் படக்குழு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா தலையில் முக்காடு போட்டும், சிவகார்த்திகேயன் தலையில் ரோஸ் கலர் துணி கட்டியும் அஜ்மீர் தர்காவில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அஜ்மீர்

அஜ்மீர்

பாலிவுட் பிரபலங்கள் தங்களின் படம் ரிலீஸாகும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்வார்கள். இந்நிலையில் சிவாவும், நயன்தாராவும் தர்காவுக்கு சென்றுள்ளனர்.

பிருந்தா

பிருந்தா

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆடும் டூயட் பாடலை படமாக்கவே படக்குழு அஜ்மீர் சென்றுள்ளது. விவேகா எழுதியுள்ள பாடலுக்கு பிருந்தா டான்ஸ் மாஸ்டராக உள்ளார்.

ஆவல்

ஆவல்

வேலைக்காரன் படத்தை பார்க்க சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். படத்தில் நயன்தாராவுக்கும் வெயிட்டான கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Team Velaikkaran including Sivakarthikeyan and Nayanthara visited the famous dargah in Ajmer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil