»   »  ’அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா’... ரைம்ஸ் பாடி அஜித், விஜயைக் கலாய்க்கும் ரோபோ சங்கர்

’அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா’... ரைம்ஸ் பாடி அஜித், விஜயைக் கலாய்க்கும் ரோபோ சங்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்.

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். 'குள்ளநரி கூட்டம்', 'நீர்ப்பறவை', 'முண்டாசுப்பட்டி', 'ஜீவா', 'நேற்று இன்று நாளை' உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

இவர் தற்போது தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள படம் தான் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்.

எழில் இயக்கம்...

எழில் இயக்கியுள்ள இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சூரி, ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன் என காமெடி பட்டாளமே நடித்துள்ளது.

அம்மா இங்கே வா வா...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் டிரைலர் வெளியானது. அதில், ரோபோ சங்கர் ‘அம்மா இங்கே வா வா' என ரைம்ஸ் பாடுகிறார்.

அப்போ தான் ஹிட்டடிக்கும்...

ஏன் இப்படி அவர் ரைம்ஸ் பாடுகிறார் என டிரைலரிலேயே சூரி கேட்க, ‘இப்போலாம் ரைம்ஸ் பாடுனா தான, டிரைலர் ஹிட் ஆகுது' என பதிலளிக்கிறார் ரோபோ.

அஜித், விஜயைத் தான்...

இப்படியாக இவர் கலாய்த்திருப்பது வேறு யாரையுமல்ல, அஜித்தையும், விஜயையும் தான். வேதாளம் பட டிரைலரில் கண்ணாம்பூச்சி ரேரே என அஜித்தும், தெறி பட டிரைலரில் டிவிங்கில் டிவிங்கிள் லிட்டில் சார் என விஜயும் ரைம்ஸ் பாடியிருந்தது நினைவு கூரத்தக்கது.

புஷ்பா புருஷனா நீ...

இது மட்டுமின்றி, டிரைலர் முழுக்க புஷ்பா புருஷனா நீ என பல்வேறு மொழிகளில் கேட்டு சூரியை தெறிக்க விட்டிருக்கிறார்கள். நிச்சயம் படம் காமெடி விருந்து வைக்கும் என நம்பலாம்.

English summary
“Amma inge vaa vaa, Aasai mutham thaa thaa” sings Robo shankar in the latest trailer release of Vishnu Vishal, Nikki Galrani starrer Velainu Vandhutta Vellatkaaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil