Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வரும் 18ம் தேடி ரிலீசாகிறது தனுஷின் 25வது படமான ‘வேலையில்லா பட்டதாரி’!
சென்னை: நடிகர் தனுஷின் 25வது படம் என்ற எதிர்பார்ப்போடு தயாரான வேலையில்லாத பட்டதாரி படம் வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளது.
தேசிய விருது வாங்கிய நடிகரான தனுஷின் சமீபத்திய படங்களான மயக்கம் என்ன, மரியான், நய்யாண்டி போன்றவை சொல்லிக் கொள்ளும் படி ஓடவில்லை. எனவே, தொடர் தோல்வியை சரி செய்யும் வகையில் தனது புதிய படங்கள் அமைய வேண்டும் எனப் போராடி வருகிறார் தனுஷ்.
அந்தவகையில் தற்போது அவர் நடித்துள்ள வேலையில்லா பட்டதாரி வரும் 18ம் தேதி ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அனிருத் இசை...
தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
டிரைய்லர்...
கௌரவ தோற்றத்தில் தோன்றிய சில படங்களை தவிர்த்து தனுஷ் நடிப்பில் வெளியாகும் 25 படம் வேலையில்லா பட்டதாரி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தின் டிரைய்லரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அமலாபால்...
இது தவிர நடிகை அமலாபால், இயக்குநர் விஜயைத் திருமணம் செய்த பின்னர், அவர் நாயகியாக நடித்து வெளியாகும் முதல் படம் இது தான். எனவே, இதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
அனேகன்...
இப்படம் தவிர தனுஷ் அனேகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்த தனுஷ், தற்போது மீண்டும் பட வேலைகளில் பிசியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.