Don't Miss!
- News சென்னையில் 3 பேர் உயிரிழந்த பப் விபத்து.. 12 பேர் மீது வழக்குப்பதிவு.. இரவோடு இரவாக போலீஸ் அதிரடி
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக்பாஸ் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் வேலன்.. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் பிரபல மலேசியன் பாடகர் முகின் ராவ்.
பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இவருக்கு ரசிகர்களாக இருக்க அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சுல்தான்.. எப்போது தெரியுமா?
இந்த நிலையில் முகேன் ராவ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையதளத்தை கலக்குகிறது.
அனைவருக்கும் பிடித்த
மலேசியா வாழ் தமிழ் குடும்பத்தில் பிறந்த முகேன்ராவ் எக்கச்சக்கமான ஆல்பம் பாடல்களை பாடி அதன் மூலம் அங்கு மிகவும் பிரபலமானவர். கடந்த பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ஆரம்பத்தில் யார் கண்ணிலும் படாமல் இருந்தவர் ஒருகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக மாறிப்போனார்.
பெண் ரசிகைகளின் எண்ணிக்கை
தர்ஷன் மற்றும் முகேன் ராவ் இருவரும் நிகழ்ச்சியின் மூலம் நண்பர்களாக மாறிப் போனாலும் போட்டி என்று வந்துவிட்டால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாண்டது அனைவரையும் நெகிழச் செய்தது. மேலும் இதன் முகேன் ராவுக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகளின் எண்ணிக்கையும் கூடிப் போனது.
வேலன்
பிக் பாஸ் டைட்டிலை தட்டிச்சென்ற முகேன் ராவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இந்த வகையில் அறிமுக இயக்குனர் கவின் இயக்கும் வேலன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இதில் கென்னடி கிளப் புகழ் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூரி, பிரபு, தம்பி ராமையா, ப்ராங் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்த நிலையில் தற்போது வேலன் படத்தின் செமயான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது. அதில் புதுமாப்பிள்ளை கணக்காக முகேன் வேஷ்டி சட்டையில் வீட்டுக்குள் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருக்க கீழே கதாநாயகி மீனாட்சி அழகான பொம்மை போன்று அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்து இருக்க பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும் இந்த வேலன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் முகேன் ராவ் வெற்றி என்ற மற்றொரு படத்திலும் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.