என் கேரியரில் வேலன் படம் மிகவும் முக்கியமானது... ஆடியோ லாஞ்சில் மனம் திறந்த பிக்பாஸ் முகேன்!

சென்னை: தன்னுடைய கேரியரில் வேலன் திரைப்படம் ரொம்பவே முக்கியமான திரைப்படம் என அப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகும முகென் ராவ் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். மலேசிய பாடகரான முகென் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் கவின் இயக்கும் வேலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமாகிறார் முகென். இந்தப் படத்தை கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார்.

31ஆம் தேதி ரிலீஸ்

31ஆம் தேதி ரிலீஸ்

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் இப்படம் காட்சியாக்கப்பட்டது. இப்படத்தில் முகெனுக்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தன் நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிஜிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 31ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

என் வாழ்க்கையில் மிகப்பெரிய மேடை

என் வாழ்க்கையில் மிகப்பெரிய மேடை

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபு, முகென், சூரி உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனஙர். இதில் பேசிய முகென் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய மேடையை என் வாழ்க்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி.

கதை சொன்னபோதே ரசித்தேன்

கதை சொன்னபோதே ரசித்தேன்

தனக்கு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி கொண்டிருக்கும் கலைஞர்களில் நான் வித்தியாசமானவன் அல்ல. அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள். கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார்.
முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையானவர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வேண்டி கேட்கிறேன்.

அவருடைய மகனை போல் பார்த்துக்கொண்டார்

அவருடைய மகனை போல் பார்த்துக்கொண்டார்

பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட். ஆனால் என்னை அவருடைய மகனை போல் பார்த்துக்கொண்டார். எனக்கு நிறைய நடிப்பு டிப்ஸ்களை கொடுத்தார். நான் சூரி அண்ணாவின் சிறந்த ரசிகன். மேலும் அவர் இன்னும் உயரங்களை எட்ட வேண்டும். சந்தித்ததுமே ராகுலுடன் இணைந்துவிட்டேன். இந்த நிலைக்கு வருவதற்கு முன்பு அவர் பல சவால்களை எதிர்கொண்டார். அவர் வாழ்க்கையில் மேலும் வெற்றிகளை அனுபவிக்க பிரார்த்திக்கிறேன்.

என் கேரியரில் முக்கியமான படம்

என் கேரியரில் முக்கியமான படம்

தம்பி ராமையா சார் நன்றாக நடித்துள்ளார். படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றினார்கள். மீனாட்சி ஒரு அர்ப்பணிப்புள்ள கலைஞர், ஒவ்வொரு ஷாட்டையும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்தார். பிரிஜிடா இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இங்கே இருந்த அனைவருக்கும் நன்றி மற்றும் உங்கள் அன்பினால், நான் இங்கே இருக்கிறேன். வேலன் என் கேரியரில் ஒரு முக்கியமான படம். இந்த படம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும், மேலும் நீங்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.. இவ்வாறு முகென் ராவ் பேசினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X