வேலன் டப்பிங் பணிகளை தொடங்கிய சூரி!
சென்னை : இதுவரை காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி வெற்றிமாறன் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
முன்னணி காமெடி நடிகராக இருக்கும் இவர் தற்பொழுது ஹீரோக்களுக்கு இணையாக உடம்பை தாறுமாறாக தயார் செய்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.
முகின் ராவ் ஹீரோவாக நடித்துள்ள வேலன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சூரி அதன் டப்பிங் வேலைகளை தொடங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

காம்போ பட்டையை கிளப்பும்
தீபாவளி,பீமா மற்றும் ஒரு சில தொலைக்காட்சித் தொடர்கள் என ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்துள்ளார். குறிப்பாக சிவகார்த்திகேயன் சூரி இணையும் திரைப்படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று சொல்லுமளவிற்கு இவர்களது காம்போ பட்டையை கிளப்பும்.

இன்று வரை அடைமொழியுடன்
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா காமெடியில் அசத்தியிருந்த சூரி பின் அனைவருக்கும் பரிச்சயமானார். அதிலிருந்து அனைவரும் பரோட்டா சூரி என இன்று வரை அடைமொழியுடன் அழைத்து வருகின்றனர்.

இயக்குனர் வெற்றிமாறன்
விஜய்,அஜித், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவைத் திறன் மூலம் அனைவரையும் சிரிக்க வைத்த சூரி தற்போது ஹீரோவாக களம் இறங்க , பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.

டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தற்பொழுது உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள முகின் ராவ் வேலன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவீன் இயக்க இதில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள சூரி தற்பொழுது வேலன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். டப்பிங் ஸ்டூடியோவில் இயக்குனர் கவின் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











