பாட்டுப்பாடி கலாட்டா செய்யும் சூரி…. வேலன் சூட்டிங் ஸ்பாட் வீடியோ !

சென்னை : முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் வேலன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூரி பாட்டுப்பாடி கலாட்டா செய்தார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோ அனைவரின் லைக்குகளை பெற்று வருகிறது.

மேலும், பலர் சூரி ஹீரோ ஆயிட்டீங்க அடுத்து என்ன பாடகரான என கேட்டு வருகின்றனர்.

ஹீரோவாக

பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகேன் ராவ். வேலன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தை கவின் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இப்படத்தில் முகேன் ராவ் உடன் பிரபு, மீனாட்சி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வேலன் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கலாட்டா வீடியோ

கலாட்டா வீடியோ

அந்த வீடியோவின் முகேன் ராவ் தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை பாட, சூரி அதற்கு ஏற்றது போல டப் செய்துள்ளார். முகேன் ராவ் பாடுவதை திடீரென நிறுத்தியதும், சூரி நானே படிக்கிறேன் என கூறி தென்றல் என்பதற்கு பதிலாக சென்ட்ரல் எனப் பாடுவார். அதன்பிறகு தயாரிப்பாளர் கலைமகன் அது சென்ட்ரல்,எக்மோர் இல்ல தென்றல் என கலாய்க்கிறார். இந்த கலகலப்பான வீடியோ ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

ஹீரோவாக

ஹீரோவாக

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவு முடிந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. நடிகர் சூர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: soori mugen rao சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X