twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்நாளே வெற்றியைக் குவித்த தனுஷின் “வேலை இல்லா பட்டதாரி”

    |

    சென்னை: தனுஷ் நடித்துள்ள வேலையில்லாத பட்டதாரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    திரையிட்ட அத்தனை இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு தியேட்டர்களில் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் கூட படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் வசூல்:

    தமிழ்நாட்டில் வசூல்:

    அதிலும் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல் சந்தோஷிக்கும் வகையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    அமோக அறுவடை:

    அமோக அறுவடை:

    3 படம் தனுஷுக்கு மிகப் பெரிய பிளாப் ஆக அமைந்தது. தற்போது அதை சரி செய்யும் வகையில் வேலையில்லாத பட்டதாரி வசூல் அறுவடை செய்து வருகிறதாம்.

    அரங்கம் நிறைந்த காட்சி:

    அரங்கம் நிறைந்த காட்சி:

    தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் கூட படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக சக்கை போடு போடுகிறதாம்.

    மொத்தமாக 350 தியேட்டர்கள்:

    மொத்தமாக 350 தியேட்டர்கள்:

    தமிழ்நாட்டில் இந்தப் படத்தை 350 தியேட்டர்களில் ரிலீ்ஸ் செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 30 திரைகளில் படம் காட்டப்படுகிறது.

    சென்னையில் வசூல் மழை:

    சென்னையில் வசூல் மழை:

    செங்கல்பட்டு 60 திரை, கோவை 65, மதுரை 30, திருச்சி 30, சேலம் 55 என படம் நீக்கமற ரிலீஸாகியுள்ளது. இதில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்துதான் முதல் நாளில் நல்ல வசூல் கிடைத்துள்ளதாம்.

    பிரபலமான டிரெய்லர், பாடல்கள்:

    பிரபலமான டிரெய்லர், பாடல்கள்:

    இப்படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே நல்லபடியாக புரமோஷன் கொடுத்ததும், பாடல்கள் ஹிட் ஆனதும்தான் படத்திற்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்புக்குக் காரணமாம். படத்தின் டிரெய்லரும், டீசர்களும் ஏற்கனவே பிரபலமாகி விட்டது நினைவிருக்கலாம்.

    தனுஷின் 25ஆவது படம்:

    தனுஷின் 25ஆவது படம்:

    இதையெல்லாவற்றையும் விட இது தனுஷுக்கு 25 ஆவது படமாகும். எனவே எதிர்பார்ப்புகளும் பெரிதாகவே இருந்தன. அதை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்திருப்பதாலும் படத்திற்குக் கிடைத்துள்ள பெரிய வரவேற்புக்குக் காரணம் என்கிறார்கள் தியேட்டர் நிர்வாகிகள்.

    முதல்நாள் வரவேற்பு:

    முதல்நாள் வரவேற்பு:

    சென்னையைச் சேர்ந்த ஒரு தியேட்டர் உரிமையாளர் கூறுகையில், " தனுஷ் சமீப காலமாக செல்வாக்கை இழந்து வருகிறார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அது தவறு என்பதை இப்படம் நிரூபித்துள்ளது. இப்படத்திற்கு முதல் நாளிலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    கேரளாவில் வெற்றி:

    கேரளாவில் வெற்றி:

    கேரளாவில் இப்படம் 60 திரைகளில் வெளியிடப்பட்டுள்ளது. அங்கும் கூட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கேள்விப்படுகிறோம்.

    பெங்களூரில் 20 இடங்கள்:

    பெங்களூரில் 20 இடங்கள்:

    கர்நாடகத்தில் தனுஷுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அங்கு இப்படம் 65 திரைகளில் வெளியாகியுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூரில் 20 திரைகளில் படம் வெளியாகியுள்ளது.

    சர்வதேச அளவிலும் அமர்க்களம்:

    சர்வதேச அளவிலும் அமர்க்களம்:

    சர்வதேச அளவில் அதாவது மலேசியா, சிங்கப்பூரிலும் கூட படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் வசூல் விவரம் தெரியவில்லை.

    English summary
    Dhanush starrer Velayilla Pattathari (Velai Illa Pattadhaari) has opened up to fantastic opening at the Box Office. The early buzz on the first day collection of the Tamil movie says that the Dhanush starrer flick has got an earth-shattering opening in the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X