டொன்டாய்ங்.. டொன்டாய்ங்".. நேரடியாக ஒடிடியில் ரிலீசாகும் வெள்ளையானை… தயாரிப்பாளர் அதிரடி முடிவு !
சென்னை : சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவான வெள்ளையானை திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்திலும் வெளியாக உள்ளது.
ஆத்மியா நாயகியாகவும் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ளார். விஷ்ணுரங்கசாமி ஒளிப்பதிவுசெய்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர், பாடல் வீடியோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மக்கள் ஆர்வம்
கொரோனாவுக்கு முன்பு வரை இந்தியாவில் ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. கொரோனா பேரிடரால் வீட்டுக்குள் முடங்கிப் போன மக்கள் பெருவாரியாக ஓடிடியில் திரைப்படங்களையும், சீரிஸ்களையும் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

வாடிக்கையாளர்கள் அதிகம்
இதனால், நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி + ஹாட் ஸ்டார், ஜீ 5 , சோனி லைவ், சன் நெக்ஸ்ட் போன்ற ஓடிடி தளங்கள் கடந்த மாதங்களில் பல மடங்கு வாடிக்கையாளர்களை பெற்றுள்ளன. கொரோனா நிலைமை சீராகி, திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சன் நெக்ஸ்ட் ஒடிடி
இந்நிலையில் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவான வெள்ளையானை திரைப்படத்தை நேரடியாக ஒடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை தியேட்டரில் தான் வெளியிடுவேன் என தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்தார். தற்போதுல்ல சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என்பதால் இந்த திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஒடிடி தளத்திலும் பின்னர் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விவசாயம் முக்கியம்
விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இன்றைய வாழ்வில்விவசாயம் எவ்வளவுஅழிந்து வருகின்றதுஎன்பதை உணர்ந்தும்கதை தான் இந்தவெள்ளை யானை. இப்படத்திலிருந்து கடந்த ஆண்டு வெளியான வெண்ணிலாபாடல் வீடியோ அனைவரின் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











