வெள்ளை யானை படத்தின் ஒளிபரப்புத் தேதி அறிவிச்சாச்சு
சென்னை : நடிகர் சமுத்திரகனி, ஆத்மியா மற்றும் யோகிபாபு உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெள்ளை யானை.
கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போன நிலையில் சன் டிவி இதன் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது.
இந்நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு இந்த படம் ஒளிபரப்பப்பட உள்ளதாக சன் டிவியில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சுப்ரமணிய சிவா இயக்கம்
சமுத்திரகனி, ஆத்மியா, யோகிபாபு உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெள்ளை யானை. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சீடன் படத்திற்கு பிறகு டைரக்டர் சுப்ரமணிய சிவா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தள்ளிப்போன ரிலீஸ்
படத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்று ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இந்த படம் ரிலீசாகாமல் இருந்தது. இதையடுத்து நேரடி டிஜிட்டல் ரிலீசுக்கு பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

கைப்பற்றிய சன் டிவி
இந்நிலையில் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. படம் எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது ஒளிபரப்புத் தேதியை சன் டிவி அறிவித்துள்ளது. இதுகுறித்த விளம்பரம் சன் டிவியில் இன்று முதல் ஒளிப்பரப்பட்டு வருகிறது.

சன் டிவியில் விளம்பரம்
வரும் ஜூலை 11ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்று விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி எப்போதும் சமூகத்திற்கு நல்ல செய்திகளை வழங்கும் வகையில் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இந்த படத்திலும் அத்தகைய நடிப்பை நாம் அவரிடம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











