கொடைக்கானலில் விக்ரம் பிரபு – ஸ்ரீதிவ்யாவின் 'முதலிரவுப் பாட்டு'
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 1000 படங்களுக்கு மேல் வியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் 'வெள்ளக்கார துரை'.
விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், சிங்கமுத்து, நான்கடவுள் ராஜேந்திரன், வனிதா, மதுமிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
வைரமுத்து, யுகபாரதி பாடல்களுக்கு டி இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் எஸ்.எழில்.

எஸ் எழில்
படம் பற்றி இயக்குனர் எழிலிடம் பேசினோம்...
வெள்ளக்கார துரை படத்திற்காக சமீபத்தில் கொடைக்கானலில் விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா பங்கேற்ற முதலிரவு பாடல் காட்சி ஒன்றை வீடு ஒன்றில் படமாக்கினோம்.

கூதக் காத்து
'கூதக் காத்து கொல்லுதடி - கூரச்சேல தாடி' என்ற முதலிரவு பாடல் அது. முதலிரவு பாடல் தான் என்றாலும் விரசமே இல்லாமல் எல்லோரும் குடும்பத்தாருடன் பார்க்கக் கூடிய பாடலாக உருவாக்கி உள்ளோம்.

விரசம் கிடையாது
நான் இயக்கிய இதற்கு முந்தைய படங்களிலும் ஆபாசமான காட்சிகள் எதுவுமே இருக்காது. அது மாதிரி தான் இதிலும்..ஜாலியான படமாக வெள்ளக்காரதுரை இருக்கும்," என்றார்.

அன்பு செழியன்
தயாரிப்பாளர் அன்பு செழியன் கூறுகையில், "ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களை விநியோகம் செய்துள்ள நான் முதன் முதலாக தயாரிக்கும் படம் இது.
நான் எதிர் பார்த்த மாதிரியே தரமான கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது. படத்தை பார்த்து விட்டேன். முழு திருப்தியாக இருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications











