இண்டிகேட்டர லெப்ட்ல போட்டு.. வண்டியை ரைட்டுல விட்ட வேல்முருகன்.. கமலே அசந்துபோன ஹார்ட் பிரேக்!
சென்னை: வேல்முருகன் பேசியதையும் அவர் ஹார்ட் பிரேக் செய்ததையும் பார்த்து அசந்து போய்விட்டார் கமல்.
பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இன்றும் தங்களுக்குள் இதயங்களையும் உடைந்த இதயங்களையும் பரிமாறி வருகின்றனர்.
அந்த வகையில் வேல்முருகனும் ஹவுஸ் மேட்ஸ்களுக்கு ஹார்ட் மற்றும் புரோக்கன் ஹார்ட்களை கொடுத்தார்.

சுரேஷ் சார் கொடுத்தது
அதற்காக ஒரு பக்கம் ரேகா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியை அழைத்தார். மறுப்பக்கம் சோமசேகர் மற்றும் சம்யுக்தாவை அழைத்தார். தொடர்ந்து பேசிய வேல்முருகன், தான் போட்டிருக்கும் துண்டு சுரேஷ் சார் கொடுத்தது. தான் கட்டியிருக்கும் வேட்டியும் சுரேஷ் சார் கொடுத்தது என்றார்.

செயின் மேடம் கொடுத்தது
எனக்கு நல்லா இருக்கும் என்று கொடுத்தார் என்றார். மேலும் தான் போட்டிருக்கும் செயின் ரேகா மேடம் கொடுத்தது என்று கூறினார். இவர்கள் இருவரும் எங்களுடன் இருக்க வேண்டும் எங்களை குழந்தையை போன்று பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக சமைத்து போட வேண்டும்.

ஹார்ட் பிரேக்குகள்
ஆனால் அவர்களுக்குள் சண்டை வருவது போல் தெரிகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் புரோக்கன் ஹார்ட் என்றார். இதனை யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு ஹார்ட்டை கொடுப்பது போன்றே பேசி விட்டு கடைசியில் ஹார்ட் பிரேக்குகளை கொடுத்து விட்டார்.

ஹார்ட்ஸ்
இதனை பார்த்த கமல் என்ன இப்படி வந்துட்டு அப்படி போய்ட்டீங்க என்று ஆச்சரியத்துடன் கேட்டார். இதனை தொடர்ந்து சம்யுக்தாவுக்கும சோம சேகருக்கும் ஹார்ட்டுகளை கொடுத்தார் வேல்முருகன்.


Click it and Unblock the Notifications











