ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி.. வேல் முருகன் கூறிய பகீர் தகவல்.. அப்செட்டான ஆர்மியினர்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ரம்யா பாண்டியன் ஒரு பச்சோந்தி என்று பாடகர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றோடு 32 வது நாளை எட்டியுள்ளது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராய் நடிகை ரேகா வெளியேறினார்.

வெளியேறிய வேல்முருகன்
அடுத்து இரண்டாவது நபராக பாடகர் வேல்முருகன் கடந்த வாரம் வெளியேறினார். இருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அர்ச்சனா மற்றும் சுசித்ரா என இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தனர்.

வேல்முருகன் பேட்டி
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய வேல் முருகன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

பட்டென சொன்ன வேல்முருகன்
அப்போது பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி யார் என்ற அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பட்டென ரம்யா பாண்டியன்தான் என்று கூறியுள்ளார் வேல்முருகன். ரம்யா பாண்டியன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் சார் பின்பு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று நடிக்கிறார்.

பச்சோந்தி போல் நடிக்கிறார்
மேலும் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காகவும் ரம்யா பாண்டியன் சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்தி போல் நடிக்கிறார் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். சுரேஷ் சக்கரவர்த்தியும் நடிப்பார்.

ஆர்மியினர் அதிர்ச்சி
ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தி சொல்லிவிட்டுதான் கொளுத்தி போடுவார் என்றும் வேல்முருகன் கூறியுள்ளார். பிக்பாஸ் டைட்டில் வின்னராகும் வாய்ப்பு ரம்யா பாண்டியனுக்கு இருக்கு என்று கூறப்படும் நிலையில் வேல் முருகன் அவரை பச்சோந்தி என கூறியிருப்பது அவரது ஆர்மியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











