மொத்தமாய் வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்.. பொங்கிய வேல்முருகன்.. விளையாட்டால் வந்தவினை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க் பெரும் களேபரத்தில் போய் முடிந்தது.

Recommended Video

Bigg Boss 4 Tamil • Bigg Bossகு வேற வேலை இல்லையா? | Rio Suresh சண்டை

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் சொல்றீயா செய்றீயா என்ற டெய்லி டாஸ்க்கை கொடுத்தார் பிக்பாஸ்.

இதில் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்ற 5 பேர் கேள்வி கேட்பவர்களாகவும், எஞ்சிய 11 பேர் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்பவர்கள் அல்ல சொல்வதை செய்ய வேண்டும்.

வேட்டு வைத்த விளையாட்டு

வேட்டு வைத்த விளையாட்டு

பாதுகாப்பாய் விளையாடுபவருக்கும் நல்லவரை போல் நடிப்பவருக்கும் வேட்டு வைக்கும் வகையில் இருந்தது இந்த கேம். இதில் நிஷாவிடம், பாலாஜி முருகதாஸ் 2 பேருக்கு நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் பட்டம் கொடுங்கள் என கூறினார். அதற்கு 3 பேரின் பெயர்களை சொல், நான் பட்டம் கொடுக்கிறேன் என்றார் நிஷா.

வேல்முருகன் வேஸ்ட்

வேல்முருகன் வேஸ்ட்

அதற்கு ஏன் பயமா இருக்கா உங்களுக்கு என பாலாஜி முருகதாஸ் கேட்க, நான் ஏன் பயப்பட போகிறேன் என்று சொல்லும் நிஷா, நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட் வேல்முருகன் தான் என அவரது பெயரை குறிப்பிட்டார்.

பேப்பரை கிழித்துப்போட்ட கேபி

பேப்பரை கிழித்துப்போட்ட கேபி

அவரை தொடர்ந்து வந்த சனம் ஷெட்டியும் வேல்முருகன் நடிக்கிறார் என்று கூறி தண்ணீர் தெளித்தார். அடுத்து வந்த கேப்ரியல்லாவும் வேல்முருகன் மீது டிஷ்யூ பேப்பரை கிழித்துப்போட்டு சாரி அண்ணா நீங்க நடிக்கிறீங்கன்னு சொல்லல கன்ஃபியூஷன்ல இருக்கிங்கன்னு சொல்றேன் என்று கூறினார்.

பொங்கிய வேல்முருகன்

பொங்கிய வேல்முருகன்

எல்லோரும் தன்னையே டார்கெட் செய்ததால் கடுப்பான வேல் முருகன், என்ன சும்மா அமைதியா இருந்தாதான் கெட்டவனா? இது நியாயமே இல்ல, யார்க்கிட்ட வம்பு வளர்த்திருக்கேன்? யார்க்கிட்ட பிரச்சனை பண்ணியிருக்கேன்? அப்படி எதுவுமே இல்லாம எப்படி என்ன சொல்ல முடியும் என ஆவேசமாய் கத்தினார்.

கொளுத்திப்போட்ட பாலாஜி

கொளுத்திப்போட்ட பாலாஜி

அவரை ரியோ, அனிதா சம்பத் உள்ளிட்ட பலரும் ஆறுதல் படுத்தினார். அப்போதும் அவர் அடங்காததால், அர்ச்சனா, 10 நிமிஷம் இரு வேலு என அவரை ஆசுவாசப்படுத்தினார். இதுபோன்ற டாஸ்க்கை கொடுத்து கொளுத்திப் போட்ட பாலாஜி, இந்த கூத்துக்களையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாரர்.

நாமினேட் செய்த ரம்யா

நாமினேட் செய்த ரம்யா

தொடர்ந்து ரம்யாவிடம் யாரையாவது நாமினேட் பண்ணுங்க என்கிறார் பாலாஜி, ராம்யாவும் வேல்முருகனின் பெயரை சொல்ல அமைதியாக தலையை குனிந்தப்படி உள்ளார் வேல்முருகன். இப்படியாக முடிந்தது சொல்றீயா செய்றீயா டாஸ்க்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X