எஸ்ஜே சூர்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம்.. 100 சதவிகிதம் பெருமைப்படும் விஷயம் குறித்து ஓபன்!
சென்னை: நடிகர் எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள் படங்களில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறார். முன்னதாக தன்னுடைய கேரியரை இயக்குநராக தொடங்கிய எஸ்ஜே சூர்யா தொடர்ந்து நடிகராக மாஸ் காட்டி வருகிறார். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் வரும் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது.
கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்திலேயே இந்தியன் 3 திரைப்படத்திலும் லீட் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ் ஜே சூர்யா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நடிகர் எஸ்ஜே சூர்யா: நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி தற்போது நடிகராக அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார். இவரது மிரட்டலான நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வரும் சூழலில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்தியன் 3 படத்திலும் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக கேம் சேஞ்சர் படம் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக அதிரடி காட்டியுள்ளார் எஸ்ஜே சூர்யா. இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் சிங்கிளின்போது இவர் ரசிகர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
கௌரவ டாக்டர் பட்டம்: தற்போது வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் எஸ்ஜே சூர்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்ஜே சூர்யா கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளியாக உள்ளதாகவும் ரியல் கேம் சேஞ்சர் ஷங்கர்தான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். கேம் சேஞ்சர் படத்தின் வெற்றி இந்தியன் 3 படததையும் வெற்றி அடைய செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஷங்கர் மிகப்பெரிய உழைப்பாளி என்றும் அவர் போன்ற மனிதர்கள் இருப்பது இந்திய சினிமாவிற்கு பெருமை என்றும் எஸ்ஜே சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.
100 சதவிகிதம் பெருமை: கௌரவ டாக்டர் பட்டம் தன்னுடைய உழைப்பிற்கும் உண்மைக்கும் கிடைத்த பரிசு என்றும் இதை தான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வதாகவும் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார். தன்னிடம் உள்ள நல்ல குணம், தான் அறிவாளியா, முட்டாளா என்பது குறித்தெல்லாம் தனக்கு தெரியாது என்று கூறியுள்ள எஸ்ஜே சூர்யா, ஆனால் தன்னுடைய உழைப்பிற்கு தான் உண்மையாக இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதை தான் 100 சதவிகிதம் பெருமையாக கூறிக் கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மீண்டும் கில்லர் படம் மூலம் இயக்குநராக களமிறங்கவுள்ளார் எஸ்ஜே சூர்யா.
மீண்டும் இயக்குநர்: கடந்த 2015ம் ஆண்டில் இசை என்ற படம்தான் எஸ்ஜே சூர்யா கடைசியாக இயக்கிய படம். இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இயக்கத்தை கைவிட்டு முழுநேர நடிகராக மாறினார். வில்லன், கேரக்டர் ரோல்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். வில்லனாக நடிப்பதற்கு 12 கோடி ரூபாய் வரையில் இவர் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. கேம் சேஞ்சர் படத்தின் ரிலீசை தொடர்ந்து தான் இயக்குநராகவுள்ள படம் குறித்த அறிவிப்பை எஸ்ஜே சூர்யா வெளியிட உள்ளதாகவும் இதற்காக பிரத்யேகமான கார் ஒன்றை சொந்தமாக வாங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











