For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வேலு பாய்..பாஷா பாய்..முத்துபாய்..பழைய மொந்தையில் புதிய கள்ளா வெந்து தணிந்தது காடு?

  |

  சென்னை: இன்று வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு ஒரே பேட்டர்னை வைத்து சுற்றி வரும் கதையா?

  முன்னர் வேலுபாய், பின்னர் பாட்சா பாய் இப்ப முத்துபாய் புதிய வடிவில் வந்துள்ளார். வெந்து தணிந்தது காடு புதுமைகள் பேசுதா?

  வெந்து தணிந்தது காடு படம் பழைய மொந்தையில் புதிய கள்ளு கதையாக பழைய ஃபார்முலாவை புதிய திரைக்கதையுடன் மெருகேற்றி உள்ளார் கவுதம் வாசுதேவ மேனன்.

  Vendhu Thanindhathu Kaadu Review: மிரட்டலா? உருட்டுலா? சிம்புவின் வெந்து தணிந்தது காடு விமர்சனம்! Vendhu Thanindhathu Kaadu Review: மிரட்டலா? உருட்டுலா? சிம்புவின் வெந்து தணிந்தது காடு விமர்சனம்!

   சிம்புவின் அயராத உழைப்பை பாராட்டும் திரையுலகம்

  சிம்புவின் அயராத உழைப்பை பாராட்டும் திரையுலகம்

  நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இன்று அதிகாலையில் வெளிவந்துள்ளது வெந்து தணிந்தது காடு மூவி. மாநாடு படத்திற்கு பின் புதிய வேகம் எடுத்துள்ள சிம்பு அதே முழு திறனையும் இந்த படத்திலும் காட்டியுள்ளார். உடலை மெலிய வைப்பதே கடினம். அதுவும் மொத்தமாக மெலிந்து 21 வயது இளைஞனாக தோன்றுவது மிக கடினம். அந்த உழைப்பை பாராட்டியே தீர வேண்டும்.

   35 ஆண்டுகளுக்கு முன் மிரட்டிய வேலுபாய்

  35 ஆண்டுகளுக்கு முன் மிரட்டிய வேலுபாய்

  வெந்து தணிந்தது காடு படம் வெளிவரும் முன்னரே கதையை ஓரளவு அனுமானித்தார்கள். இது கேங்ஸ்டர் படமாகத்தான் இருக்கும் என்று. ஆம் அது கேங்ஸ்டர் படம் தான். மணிரத்னம் வர்தா பாய் கதையை மையமாக வைத்து கொஞ்சம் காட்ஃபாதரை கலந்துக்கொடுத்து நாயகன் படத்தை உருவாக்கினார். அதுவரை சாக்லெட் பாயாக வலம் வந்த கமல் இதில் காட்ஃபாதர் ஹீரோவை பின்பற்றி மிரட்டியிருப்பார். 35 ஆண்டுகளுக்கு முன் யதார்த்தமான அந்த நடிப்பும், காட்சி அமைப்புகளும் நாயகனை கொண்டாட வைத்தது.

   ரிவர்ஸ் டைப் கதை சொன்ன பாட்சா பாய்

  ரிவர்ஸ் டைப் கதை சொன்ன பாட்சா பாய்

  அதன் பின்னர் அதே பாணியில் ஆனால் சற்று மாற்றத்துடன் ரிவர்ஸ் டைப் கதையில் மும்பை கேங்ஸ்டர் கதையை எடுத்தார் சுரேஷ் கிருஷ்ணா. முதல்பாதி சாதாரண ஆட்டோ ஓட்டுநராக வருவார் ரஜினி. ஜாலியாக கதை நகரும் திடீரென ஆனந்த்ராஜ் தம்பி தங்கையை அடிக்க கெஞ்சிபார்க்கும் ரஜினி ஒரு கட்டத்தில் வெறிகொண்ட வேங்கையாவார். 'உள்ளேப்போ' என்கிற வார்த்தையில் காட்டும் கோபம், கொடூரமாக மாறி துவம்சம் செய்வார். பின்னர் கதை பின்னோக்கி நகரும். கேங்க்ஸ்டார் எப்படி ஆட்டோ ஓட்டுநராக மாறினார் என. ஆனால் பாட்சாவில் வில்லன் ஆண்டனி ரஜினிக்கு இணையாக மிரட்டியிருப்பார்.

   கையை சுட்டுக்கொண்ட கார்த்திக் சுப்புராஜ்

  கையை சுட்டுக்கொண்ட கார்த்திக் சுப்புராஜ்

  பாட்சா பாய்க்கு அடுத்து பலர் அதே ஸ்டைலில் முயன்றார்கள். ஆனாலு இந்த இரண்டு படங்கள் போல் பேசப்படவில்லை. கார்த்திக் சுப்புராஜ் பரோட்டா மாஸ்டர் தனுஷ் கேங்க்ஸ்டராக அதுவும் லண்டனில் மாறுவது போல் எடுத்து கையை சுட்டுக்கொண்டார். தற்போது வேலுபாய், பாட்சா பாய் ஸ்டைலில் முத்துபாயாக வெந்து தணிந்தது காடு மூலம் சிம்பு வந்து மிரட்டியுள்ளார். பாட்சாவுக்கு ஒரு ஆண்டனி போல் முத்துபாய்க்கும் ஒரு வில்லன் இருக்கிறார். ஆனால் சப்பென்று முடிகிறதாம் அவர் ரோல். ஃபேமிலி மேனில் மிரட்டிய தீரஜ் மாதவ் தான் அது.

   சிம்புவின் தனித்துவமான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கைகொடுக்குமா?

  சிம்புவின் தனித்துவமான நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கைகொடுக்குமா?

  வேலு பாய், பாட்சா பாய் ஸ்டைலை பின்பற்றி பழைய மொந்தையில் புதிய கள்ளாக இருந்தாலும் சிம்புவின் தனித்துவமான நடிப்பும், ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் படத்தை ஆரவாரமாய் கொண்டாட வைக்கிறது. காதல் கதைகளிலும், கிரைம் கதைகளிலும் மிரட்டிய மவுதம் வாசுதேவ மேனன் கேங்க்ஸ்டர் கதையில் இறங்கியுள்ளார். முதல்பாகம் மட்டுமே இன்னொரு பாகமும் வருகிறது என்கிறார்கள். இதுபோன்ற படங்களில் பிற்பாதி ஆர்வத்தை தூண்டும் விதமாக முடியும். இதில் அது மிஸ்ஸாகியுள்ளது. விடிகே, கேவிஎம்முக்கு கைகொடுக்குமா, சிம்புவின் உழைப்புக்கு பலன் இருக்குமாரசிகர்கள் கைதிதான் உள்ளது.

  English summary
  Is the story of Vendhu Thaninthadhu Kadu, which has been released today, going around with the same pattern? Earlier Velubhai, then Batcha Bhai, now Muthu bai has come in a new form. Vendhu thanindhathu Kadu innovations speak? Vendhu thanindhathu Kadu film is a new style story in the old style and Gautham Vasudeva Menon has refined the old formula with a new screenplay.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X