கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக.. பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் திடீர் கைது!

By

சென்னை: கந்த சஷ்டி குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

Lakshmi Ramakrishnan ஆவேச பேட்டி, Karuppar Koottam சர்ச்சை

நாளைய மனிதன், புதிய ஆட்சி, ராஜாளி, கடவுள், புரட்சிக்காரன், காதல் கதை உட்பட சில படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன்.

சில படங்களில் நடித்தும் உள்ளார். தனது 60 வயதில் தன் படத்தில் நடித்த செர்லின் தாஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.

கருப்பர் கூட்டம்

கருப்பர் கூட்டம்

கடவுள் மறுப்பு கொள்கையை கொண்டவரான வேலு பிரபாகரன் தனது படங்களிலும் அந்த கருத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பரபரப்புக் கிளம்பியது. இது பற்றி சமூக வலைதளங்களில் வாக்குவாதம் நடந்தது. பின்னர் போலீசில் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து கருப்பர் கூட்டத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 வேலு பிரபாகரன்

வேலு பிரபாகரன்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார், அண்ணா சிலைகளை அவமதிக்கும் சம்பவங்களில் சிலர் ஈடுபட்டனர். கோவையில் பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினரும் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சினிமா இயக்குநர் வேலு பிரபாகரன், கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம்

அதில் அவர், கருப்பர் கூட்டம் சுரேந்தரை ஆதரித்தும் கந்த சஷ்டி கவசம், இந்து மதம் ஆகியவற்றிற்கு எதிராகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், வேலு பிரபாகரன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

கைது செய்தனர்

கைது செய்தனர்

இந்த மனுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டதை அடுத்து. அவர்கள் இயக்குநர் வேலு பிரபாகரனை மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் இன்று கைது செய்தனர். அவர் மீது, கலகம் செய்ய தூண்டுதல், மதம் விரோதத்தை தூண்டுதல், மிரட்டல், அவமதித்தல் உட்பட சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X