மறைந்த வேலு பிரபாகரனின் கடைசி படம் எது தெரியுமா?.. ‘யார் அந்த சார்’ விஷயத்தை தொட்டிருக்காரே!

சென்னை: இவர்கள் வித்தியாசமானவர்கள் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான வேலு பிரபாகரன் நாளைய மனிதன் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமானார். அதிசய மனிதன், புதிய ஆட்சி, அசுரன், ராஜாஜி, கடவுள், சிவன், புரட்சிக்காரன், காதல் கதை என பல படங்களை இயக்கியுள்ளார். ஒரு சில படங்களில், இவர் நடித்தும் இருக்கிறார்.

1957ம் ஆண்டு மே 6ம் தேதி சென்னையில் பிறந்த வேலு பிரபாகரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், பலரும் அவர் நேற்றே இறந்து விட்டதாக இரங்கல் தெரிவிக்க ஆரம்பித்து விட்ட்னார்.

Velu Prabhakaran s last movie titled Yaar Antha Sir starred by Mansoor Ali Khan

ஆனால், இன்று காலை தான் அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 68 வயதிலும் அவர் கடைசியாக மன்சூர் அலி கானை வைத்து படம் இயக்கி இருக்கிறார். விரைவில் அந்த படம் வெளியாகும் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாரு இந்த வேலு பிரபாகரன்?: புரட்சிக் கருத்துக்கள் நிறைந்த படங்களை இயக்கி பிரபலமானவர் தான் வேலு பிராபகரன். 1997ம் ஆண்டு இவர் இயக்கி நடித்து வெளியான கடவுள் திரைப்படம் சிறந்த வசனங்களுக்காக மாநில விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜெயாதேவி என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து வாழ்ந்து வந்த வேலு பிராபகரன் 2009ம் தேதி அவர் இயக்கத்தில் வெளியான காதல் கதை படத்தில் நடித்த நடிகை ஷிர்லி தாஸை மணந்து கொண்டார். இளம் வயது பெண்ணை வயதானவர் திருமணம் செய்துக் கொண்டதாக அப்போதே சர்ச்சைகள் வெடித்தன.

வேலு பிரபாகரனின் கடைசி படம்: மன்சூர் அலி கான் நடிப்பில் உருவாகி வரும் 'யார் அந்த சார்?' படம் தான் வேலு பிரபாகரன் இயக்கத்தில் உருவான கடைசி படம். அந்த படத்தின் படப்பிடிப்பை மொத்தமாக அவர் முடித்து விட்டார் என்றும் விரைவில் அந்த படம் திரைக்கு வரும் என்றும் மன்சூர் அலி கான் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜிஆரின் தீவிர ரசிகரான வேலு பிரபாகரன் உயிரிழந்த நிலையில், திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டு இனிகோ பிரபாகர், யோகி பாபு நடிப்பில் வெளியான கஜானா படத்திலும் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X