காட்டுத் தீ.. கெளரி கொலை.. என்ன செய்கிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார். மிரட்டும் வெல்வெட் நகரம் டிரைலர்!

சென்னை: வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Recommended Video

Varalakshmi PreB'day Celebration | ReUnion | BindhuMadhavi | Vikram Prabhu

மனோஜ் குமார் நடராஜன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகி உள்ள வெல்வெட் நகரம் நாளை திரைக்கு வருகிறது.

இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை வரலக்‌ஷ்மி, நாளை திரையரங்குகளில் ரசிகர்களுக்கு பிறந்த நாள் ட்ரீட் கொடுக்க உள்ளார்.

கம்பேக்

கம்பேக்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானார் வரலக்‌ஷ்மி சரத்குமார். தொடர்ந்து சில படங்களில் நாயகியாக நடித்த வரலக்‌ஷ்மி, சண்டக்கோழி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் வில்லியாக மிரட்டினார். தற்போது, வெல்வெட் நகரம் படத்தின் மூலமாக மீண்டும் நாயகியாக கம்பேக் ஆகிறார்.

என்ன கதை

என்ன கதை

கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட குரங்கணி காட்டுத் தீவிபத்தில் சிக்கி 22 சுற்றுலா பயணிகள் கருகி உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள வரலக்‌ஷ்மி சரத்குமாரின் வெல்வெட் நகரம் படமும் காட்டுத் தீ பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அதிரடி வரு

நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, டாப்ஸி வரிசையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் தற்போது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையான வெல்வெட் நகரம் படத்தில் நடித்துள்ளார். தற்போது வெளியாகி உள்ள வெல்வெட் நகரம் படத்தின் டிரைலர் காட்சிகளில், அதிரடி ஆக்ஷன் காட்டி மிரட்டுகிறார் வரலக்‌ஷ்மி சரத்குமார்.

இவரும் இருக்காரு

இவரும் இருக்காரு

இந்தியன், தமிழ் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை கஸ்தூரி, நாளை வெளியாகவுள்ள வெல்வெட் நகரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். காட்டுத் தீ விவகாரம் பற்றி ஆய்வு செய்ய வரும் கெளரியை கொலை செய்தது யார் என்று வரலக்‌ஷ்மி கண்டுபிடிக்க இவரும் உதவுகிறாரா என்பது படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்தால் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X