வரலட்சுமியின் 'வெல்வெட் நகரம்' ஸ்பெஷல் ஷோ... என்ன சொல்கிறார்கள் பிரபலங்கள்?

சென்னை: வரலட்சுமி சரத்குமார், ரமேஷ் திலக், கஸ்தூரி நடிப்பில் மனோஜ்குமார் நடராஜன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் "வெல்வெட் நகரம்" இதனை திரைபிரபலங்கள் பலர் சிறப்பு காட்சி பார்த்தனர். அவர்கள் படத்தை பற்றி கூறிய தகவல்களை பார்ப்போம்.

நடிகை பிந்துமாதவி கூறுகையில், எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது, வரு என் தோழி ஆனால் அதனை எல்லாம் தாண்டி படம் நன்றாக உள்ளது வரு சூப்பராக நடித்துள்ளார். படத்தில் இரண்டாம் பாதி மிகவும் சுவாரசியமாக இருந்தது, திரைக்கதை அமைந்த விதம் புதுமையாக இருந்தது. ஒட்டுமொதத்தில் வெல்வெட் நகரம் ஒரு நல்ல திரைப்படம்.

Velvet Nagarm good movie

நடிகர் சாந்தனு கூறுகையில், படம் நன்றாக இருந்தது, ஒரு சமூகத்தில் நடக்கும் காரணம் மற்றும் அங்கு நடக்கும் தவறுகள், அதனை வைத்து ஒரு திரில்லர் படமாக வழங்கியுள்ளனர். இது பார்ப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் இருந்தது, வருவின் நடிப்பு அருமையாகவும் ரசிக்கும் படியும் இருந்தது.

நடிகர் சரத்குமார் கூறுகையில், ஒரு திரில்லர் படமாக இருந்தது, கடைசியில் சமூதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை கூறியுள்ளனர். ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்த படம் இரண்டாம் பாதிக்கு பிறகு படம் விறுவிறுப்பாக இருந்தது, என்ன நடக்கிறது என்று எதிர்பார்ப்பு இருந்தது ஒரு வித்தியாசமான க்ளைமாக்ஸ் தந்துள்ளனர் மொத்தத்தில் படம் சூப்பர்.

Velvet Nagarm good movie

நடிகர் ஹரீஷ் கல்யாண் கூறுகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை டேன்சனாக இருந்தது. திரைக்கதை அமைத்த விதம் சூப்பர், நான் எல்லோருடைய நடிப்பும் பாராட்டும் விதமாகவே இருந்தது. குறிப்பாக படத்தொகுபாளருக்கு பாராட்டுக்கள் மற்றும் பின்னணி இசையும் அற்புதமாக இருந்தது காட்சிக்கு காட்சி ஒலித்த அந்த இசை படத்தின் இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியது. ஒரு குழுவாக இவர்களுக்கு இது ஒரு சக்சஸ் படமாக இருக்கும் எனது பாராட்டுக்கள்.

Velvet Nagarm good movie

Recommended Video

Varalakshmi PreB'day Celebration | ReUnion | BindhuMadhavi | Vikram Prabhu

இயக்குனர் மிஷ்கின் கூறுகையில், விறுவிறுப்பாக இருந்தது, இரண்டாம் பாதி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, புதுமையாக உள்ளது. இளம் தலைமுறையினரின் உழைப்பு, வரலட்சுமி மற்றும் அனைவரும் நன்றாக நடித்து இருந்தனர். மீண்டும் கூறுகிறேன் படம் விறுவிறுப்பாக அமைந்தது, அனைத்து வயதினரும் பார்க்கும் படமாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X