புரோக்கராக மாறிய விமல்: பார்த்து ஏடாகூடமாகிடப் போகுது!

By Siva

Recommended Video

தி புரோக்கர் படத்தில் தரகராக நடிக்கும் விமல்- வீடியோ

சென்னை: தி புரோக்கர் படத்தில் விமல் தரகராக நடிக்கிறார்.

விமல் நடிப்பில் அண்மையில் வெளியான இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் படம் ஆண்களுக்கு பிடித்துள்ளது, பெண்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் விமல்.

தி புரோக்கர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தை டார்ச்லைட் பட புகழ் மஜித் இயக்கி வருகிறார்.

விமல்

விமல்

என் படத்தில் விமல் புரோக்கராக நடிக்கிறார். குண்டூசியில் இருந்து பெரிய வியாபாரம் வரை அனைத்துக்குமே புரோக்கர்கள் தேவைப்படுகிறார்கள். புரோக்கர்கள் டீல் பேசி முடிக்க எந்த அளவுக்கு செல்வார்கள் என்பதை இந்த படத்தில் காமெடியாக காட்டுகிறோம் என்கிறார் மஜித்.

தரகர்

தரகர்

நிலம் முதல் திருமணம் வரை அனைத்தையும் முடித்துக் கொடுக்கும் புரோக்கராக நடிக்கிறார் விமல். அண்ணாதுரை படத்தில் நடித்த டயானா சம்பிகா விமல் ஜோடியாக நடிக்கிறார். தற்போதைக்கு சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களுக்கு இங்கு தான் படப்பிடிப்பு. அதன் பிறகு ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று மஜித் தெரிவித்துள்ளார்.

பழக்கம்

பழக்கம்

நான் வாடகைக்கு வீடு தேடியபோது புரோக்கர் வழியாகத் தான் தேடினேன். அதனால் புரோக்கர்களுடன் பேசிய அனுபவம் உள்ளது. இனிமையாக பேசி அவர்கள் காரியம் சாதிக்கும் விதம் எனக்கு பிடித்துள்ளது என்று விமல் தெரிவித்துள்ளார். தி புரோக்கர் என்று ஆங்கில தலைப்பு வைத்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பாமல் இருந்தால் சரி.

யோகி பாபு

யோகி பாபு

தி புரோக்கர் படத்தில் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், மயில்சாமி, ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். யோகி பாபு ரொம்ப காஸ்ட்லியான காமெடின். அவர் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால் காமெடி தூக்கலாக இருக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X