விமல் நடிப்பில் விலங்கு வெப் தொடர்... சிவகார்த்திகேயன் வெளியிட்ட மிரட்டலான ட்ரெயிலர்

சென்னை : நடிகர் விமல் நடிப்பில் உருவாகிவரும் வெப் சீரிஸ் விலங்கு. தொடரை இயக்கியுள்ளார் பிரசாந்த் பாண்டிராஜ்.

இந்த தொடரில் விமலுக்கு ஜோடியாகியுள்ளார் இனியா. பால சரவணன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இதனை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விமல்

நடிகர் விமல்

நடிகர் விமல் பசங்க படத்தின்மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் களவாணி, வாகை சூடவா உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் சிறப்பான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு படத்திலும் இவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தன.

வெப் தொடரிலும் நடிப்பு

வெப் தொடரிலும் நடிப்பு

இந்நிலையில் தற்போது இவரது நடிப்பில் எங்க பாட்டன் சொத்து, சண்டைக்காரி, மஞ்சள் குடை, குலசாமி படங்கள் உருவாகி வருகின்றன. விரைவில் இவை அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. படங்களில் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் விமல் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

விலங்கு வெப் தொடர்

விலங்கு வெப் தொடர்

ஜிவி பிரகாஷின் புரூஸ்லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது விலங்கு என்ற வெப் தொடரில் விமல் நடித்து வருகிறார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த தொடர் உருவாகி உள்ளது. பிப்ரவரி 18ல் ஜீ5 தளத்தில் இந்த தொடர் வெளியாகவுள்ளது.

காவலராக விமல்

காவலராக விமல்

இதில் விமல் காவலராக நடித்துள்ளார். சொந்த பிரச்சினைகளில் சிக்கி தவிக்கும் அவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் ஒரு கொடூரமான கொலையை இந்த தொடர் கதைக்களமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்ரெயிலர்

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்ரெயிலர்

தொடரும் கொலைகள், தீராத மர்மம், தூங்காத தேடல் என்று அவர் இந்த ட்ரெயிலருக்கு கேப்ஷன் வெளியிட்டுள்ளார். அதற்கு தகுந்தாற் போலவே இந்த தொடரின் ட்ரெயிலரில் சிறப்பான சம்பவங்கள் காணப்படுகின்றன. தலையில்லாத சடலத்தை கொண்டு தனது புலனாய்வை செய்கிறார் விமல்.

மிரட்டலான ட்ரெயிலர்

மிரட்டலான ட்ரெயிலர்

கர்ப்பமான மனைவி இனியாவுடன் இருக்க முடியாத நிலையில், அவர் இந்த கொலையை புலனாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அடுத்தடுத்த பரபரப்பான சம்பவங்களின் கோர்வையாக இந்த ட்ரெயிலர் மிரட்டலாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X