twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்

    By Shankar
    |

    ஹரி இயக்கத்தில் விஷால் இப்போது தயாரித்து, நடித்து வரும் பூஜை படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியது எஸ்ஆர்எம் குழுமத்தைச் சேர்ந்த வேந்தர் மூவீஸ்.

    இதற்காக மிகப் பெரிய தொகையை விஷாலுக்குத் தந்துள்ளது அந்த நிறுவனம்.

    விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் பூஜை படம் வரும் தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிறது. விஷால் ஜோடியாக இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாமிரபரணிக்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது.

    இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை பாரிவேந்தரின் வேந்தர் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே விஷால் தயாரித்த பாண்டிய நாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் படங்களையும் வேந்தர் மூவீஸ்தான் வெளியிட்டது. அந்தப் படங்களின் வெற்றி, விஷாலின் அடுத்தடுத்த படங்களையும் வேந்தர் மூவீஸை வாங்க வைத்துள்ளது.

    English summary
    Vendhar Movies has been acquired the theatrical rights of Vishal's Poojai for a whopping price.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X