twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்காவின் கேரள உரிமையையும் வாங்கியது வேந்தர் மூவீஸ்!

    By Shankar
    |

    ரஜினியின் லிங்கா படத்தின் தமிழக உரிமை (கோவை தவிர்த்து) மட்டுமல்ல, அதன் கேரள உரிமையையும் வாங்கியுள்ளது வேந்தர் மூவீஸ்.

    இந்தியத் திரையுலக வர்த்தகத்தில் புதிய மைல் கல்லாகத் திகழ்கிறது ரஜினியின் லிங்கா விற்பனை.

    ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ள லிங்கா படத்தை ஏற்கெனவே பெரும் விலைக்கு வாங்கிவிட்டது ஈராஸ் நிறுவனம். படத்தின் தயாரிப்பாளர் வெளியீட்டுக்கு முன்பே ரூ 200 கோடிக்கும் மேல் ஈட்டித் தந்துள்ளது. படத்தை வாங்கிய ஈராஸ் நிறுவனமும் மாநிலவாரியாக நல்ல விலைக்கு படத்தை விற்று வருகின்றனர்.

    இப்போது மாநிலவாரியாக படத்தை விற்று வருகிறது. தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையை வேந்தர் மூவீஸ் கேட்டு வந்தது. சில தினங்களுக்கு கோவை தவிர்த்த தமிழகத்தின் விற்பனை உரிமையைப் பெற்றது. கோவை உரிமை மட்டும் லலிதா ஜூவல்லரி நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது லிங்காவின் கேரள உரிமையையும் வேந்தர் மூவீசே வாங்கியுள்ளது.

    English summary
    Vendhar Movies has snapped the Kerala distribution rights of Rajini's Lingaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X